அந்தகர்கள் ஒருபோதும் அரசாளக் கூடாது என்பது எங்கள் குடிக்கூற்று” என்றனர் விருஷ்ணிகள். “இந்நகரை நிறுவியவரின் முதல் மைந்தர் அவர்” என்றார்கள் அந்தகர்கள். “ஆம், ஆனால் தன் அழகாலும் ஆணவத்தாலும் அவர் மேல் செல்வாக்கு கொண்ட அந்தகக் குலத்து பெண்ணின் வழியாக அவர் குருதிமுதன்மை பெற்றார்” என்றனர் விருஷ்ணிகள். “சத்யபாமையை அரசி அல்ல என்கிறீர்களா?” என்றனர் அந்தகர். “அவரை அரசியென குடியவைக்கு வெளியே இளைய யாதவர் காட்டியதே இல்லை. அரசியென அமைந்தவர் ருக்மிணி” என்றனர் ஷத்ரியர். “ஆகவே ருக்மிக்கு முடியை அளித்துவிடுவோமா?” என்று அந்தகர் ஏளனம் செய்தனர்.
4
13
புகுந்து துயின்றோம். கிளம்பிய ஒரு நாளிலேயே அந்நிலத்தில் செல்வதற்கான வழிமுறைகளை