இல்லை, அவ்வாறல்ல” என்று சுருதன் சொன்னார். “இது மக்களின் தெரிவு என்பது நமக்கே தெரியும். மக்கள் இது உங்கள் தெரிவென்று நினைக்கிறார்கள். நாம் ஆணையிட்டோம் என பிற மைந்தர் எண்ணுகிறார்கள். அவ்வண்ணமே நீடிக்கட்டும். இந்தப் பெருந்திரள் மேல் முழுமையான கட்டுப்பாடு உங்களுக்கே என்றிருக்கட்டும். அது நமக்கு பலவகையிலும் நன்று… நம்மை பிறர் அஞ்சுவார்கள். நாம் இவர்களை நடத்திக்கொண்டுசெல்கிறோம் என்பது இதற்குள் மற்ற அரசர்களிடம் சென்று சேரும். அவர்கள் நம்மை அரசன் என மதிப்பார்கள்…” ஃபானு “ஆம், அதுவும் உண்மை” என்றார். “ஆகவே முகப்பில் நம் ஆணைமுரசுகள் ஒலிக்க ஏற்பாடு செய்திருக்கிறேன். நம் ஆணைமுரசுகளால் அவர்கள் செலுத்தப்படுவதாக தோன்றும்… அது செல்லும் வழியையே முரசுகள் சொல்கின்றன என்று எவருக்கும் தெரியப்போவதில்லை” என்றார் சுருதன்.
3
12
சாப்பிட இயலாது” என்றார். “அரவிந்தா என் பெண்ணை கண்ட முதலியாருக்கும் கட்டித் தர மாட்டேன் வருகிறவ