ஸாமி மரத்தின் இலைகளை வெட்டி சருகுகளையும் கலந்து சற்றே உப்புநீர் கலந்து ஊறவைத்து அளித்தால் சுமைவிலங்குகள் அவற்றை உண்பதை கண்டுகொண்டோம். சற்றே மாவும் சேர்த்து அவற்றுக்கு அளித்தால் அது போதுமான உணவு. அதன்பின் புல்லுக்கோ பிறவற்றுக்கோ தேடல் இருக்கவில்லை. வெயிலை முழுமையாகவே தவிர்த்துவிட்டமையால் நீரின் தேவை மிகமிகக் குறைந்தது. வியர்வை இல்லாமலாகியபோது உணவில் உப்பை குறைத்து நீர் அருந்துவதையும் குறைக்க முடிந்தது. மெல்ல இரவின் உலகை அறியலானோம். விண்மீன்களால், திசைமாறும் காற்றுகளால், சிற்றுயிர்களால் ஆன முற்றிலும் புதிய ஓர் உலகம். “கந்தர்வர்களே, தேவர்களே, உடனிருங்கள். உங்கள் உலகில் வாழ்கிறோம் நாங்கள்!” என்ற பாணனின் பாடல் மக்களிடையே அன்றாடமென ஒலித்தது.
4
18
ஆணையிட்டோம் என பிற மைந்தர் எண்ணுகிறார்கள். அவ்வண்ணமே நீடிக்கட்டும். இந்தப் பெருந்திரள்