இரவில் பாலைநிலம் குளிர்ந்திருந்தது. குளிர்காற்று வீசியது. விண்ணில் விண்மீன்களின் ஒளிப்படலம். கண் அந்த வானொளிக்கு பழகியபோது கூழாங்கற்கள் கூட தெளிவாகத் தெரிந்தன. விடாய் மிகவில்லை. மூன்று இடங்களில் அமர்ந்து உணவு உண்டு புலரிவரை சென்றோம். அந்தத் தொலைவை பகலில் கடக்கவே முடியாது.
புலரிக்கு முன்னரே பகலணையும் இடத்தை கண்டுகொண்டோம். இரவெல்லாம் இருளை நோக்கி நடந்துவிட்டு வந்தால் புலரிவெளிச்சம் கண்களை கூசவைத்து பணியாற்ற முடியாமல் ஆக்குகிறது என்று அறிந்தோம். ஆகவே விடிவெள்ளி தோன்றியதுமே பயணத்தை நிறுத்திவிட்டு ஒரு சாரார் குழிகளை தோண்டத் தொடங்கினோம். ஒரு சாரார் அடுமனை கூட்டினர். இருள் விலகிக்கொண்டிருக்கையிலேயே உணவுண்டு துயில்கொண்டோம். ஒளியில் விழித்துக்கொண்டால் இரவின் இருளுக்கு விழி பழக பொழுதாகியது. ஆகவே கதிர் நன்கணைந்த பின்னரே விழித்தெழுந்தோம். உணவு உண்டபின் நடை தொடங்கினோம். இருளிலேயே இருந்த விழிகள் கூர்கொண்டபடியே வந்தன. நாங்கள் இருளுக்குள் வாழும் உயிர்களென மாறிக்கொண்டிருந்தோம்.
இந்நகரை நிறுவியவரின் முதல் மைந்தர் அவர்” என்றார்கள் அந்தகர்கள். “ஆம், ஆனால் தன் அழகாலும் ஆணவத்தாலும்