அனைவரும் மணலுக்குள் புகுந்துவிட்டார்கள்” என்று பிரஃபானு சொன்னார். “மணலுக்குள்ளா? எவ்வாறு?” என்று வியப்புடன் ஃபானு கேட்டார். “அது பாலையில் வாழும் எலிகளின் நெறி. இங்குள்ள அனைவருமே அதைத்தான் செய்கின்றனர். மானுடருக்கு எப்போதுமே சிற்றுயிர்கள்தான் வழிகாட்டி” என்று ஃபானுமான் சொன்னான். “துவாரகையில் இவர்கள் பறவைகளாக வாழ்ந்தனர், இப்போது எலிகளாக்கிவிட்டோம்” என்றார் ஃபானு. ஃபானுமான் “அவர்கள் சிறகு கொள்ளும் காலம் வரும், மூத்தவரே” என்றான். சுருதன் “ஒவ்வொன்றிலும் அதற்கான மகிழ்ச்சி உள்ளது” என்றார். “வானில்லாத வாழ்க்கை!” என்று ஃபானு சொன்னார். “நாம் கதிரவனையே பார்க்காதவர்களாக ஆகிவிட்டோம்!”
தொடங்கிய மறுநாளே பயணப்பொழுது இயல்பாக வகுக்கப்பட்டது. பயணம் முழுக்கமுழுக்க இரவில்தான். பகலில் முழுமையான ஓய்வு. அந்த ஒழுங்கை உடலும் ஓரிரு நாட்களில் கற்றுக்கொண்டது.
புகுந்து துயின்றோம். கிளம்பிய ஒரு நாளிலேயே அந்நிலத்தில் செல்வதற்கான வழிமுறைகளை