பின்னர் ஒரு நாழிகைக்குள் மொத்தத் திரளும் மண்ணுக்குள் புகுந்துவிடும் அளவுக்கு இரண்டு ஆள் ஆழமான குழிகளை அமைத்தனர். அதற்குள் மூச்சுக்காற்று உள்ளே வரும்படி வாசல்களை அமைக்க பழகினர். கூரையாக இட்ட தட்டியின்மீது தடிமனாக மணலை அள்ளிப்போட்டுக்கொண்டால் உள்ளிருப்பவர் இன்னும் குறைவாகவே வெப்பத்தை உணரமுடியும். சிலர் மூங்கில்தட்டியை வளைத்து குழலென அமைத்து அதை பாலைமணல் சரிவில் பதித்து உள்ளிருக்கும் மணலை எடுத்து எடுத்து அதை உள்ளே செலுத்தி பொந்து ஒன்றை உருவாக்கி அதற்குள் இறங்கி உள்ளே படுத்துக்கொண்டனர். மணலுக்கு அடியில் பல்லாயிரம் பேர் படுத்து துயில வெளியே அனலென எரியும் வெயிலும் சுட்டுப்பழுத்த மணல் அலைகளும் பரவியிருந்ததை ஒருநாள் பார்த்தேன். வியப்புடன் அது பாலைவன எலிகளின் வழிமுறை என்று புரிந்துகொண்டேன்.
3
14
விழித்துக்கொண்டால் இரவின் இருளுக்கு விழி பழக பொழுதாகியது. ஆகவே கதிர் நன்கணைந்த பின்னரே விழித்தெழுந்தோம்