பாலைநிலத்தினூடாக ஏழு நாட்கள் சென்றோம். பகலில் வெயில் ஏறுகையில் ஆங்காங்கே தங்கி, துணியாலும் மூங்கில் தட்டிகளாலும் கூரைசாய்வுகள் அமைத்துக்கொண்டு அவற்றுக்குள் புகுந்து துயின்றோம். கிளம்பிய ஒரு நாளிலேயே அந்நிலத்தில் செல்வதற்கான வழிமுறைகளை ஒவ்வொருவரும் கற்றுக்கொண்டார்கள். மணலை ஆழமாகத் தோண்டி ஓரிருவர் புகுந்து கொள்ளும் அளவுக்கு துளைபோன்ற பள்ளங்களை உருவாக்கினர். அப்பள்ளங்களுக்கு மேல் தட்டிகளாலோ துணியாலோ கூரையிட்டனர். உள்ளே இறங்கி படுத்துக் கொண்டால் பாலையில் எரியும் கொடுவெயிலை தவிர்க்க முடிந்தது. நெஞ்சளவு ஆழத்து மண்ணை தோண்டிவிட்டால் அடியிலிருக்கும் மண் தண்மை கொண்டது என்பதை அறிந்தனர். மென்மையான மணலை எங்கே கண்டடைவது என்று உணர்ந்தனர்.
3
14
கூரையாக இட்ட தட்டியின்மீது தடிமனாக மணலை அள்ளிப்போட்டுக்கொண்டால் உள்ளிருப்பவர் இன்னும் குறைவாகவே வெப்பத்தை