இத்தாலி மற்றும் ஜுவென்டஸ் (Juventus) அணியின் முன்னாள் கோல்கீப்பர் Buffon தனது கோல் போஸ்டிற்கு ஒரு முகநூலில் ஒரு கடிதம் எழுதியுள்ளார்
இதைவிட சிறப்பாக கோல்கீப்பரை மற்றும் கோல் போஸ்டை பற்றி யாரும் எழுத முடியாது. இந்த புத்தகத்தில் Laurent இக்கடிதத்தை மேற்கோள் காட்டியுள்ளார்.
The Forward பகுதியில் மரடோனா பற்றியே அதிகம்.தற்போதைய வீரர்கள் பற்றி எதுவும் இந்த புத்தகத்தில் இல்லை. Defender மற்றும் மிட்பீல்டர் வீரர்களின் வளர்ச்சியைக் பல எடுத்துக்காட்டுடன் விவரித்துள்ளார்.கால்பந்தின் விதிகள் மிகவும் எளிதானது ஒன்றைத்தவிர அது offside. offside விதியைப் பற்றி மிகவும் தெளிவாக விளக்கியுள்ளார். offside-ன் வரலாறு மிகவும் சுவாரசியமானது. . 1992-ல் மற்றொரு முக்கியமான விதி மாற்றமான backpass நிகழ்ந்தது. இந்த மற்றும் ஆட்டத்தின் போக்கையே மாற்றியது என்றால் மிகையாகாது. இந்த விதியைப் பற்றியும் மிக தெளிவாக எழுதியுள்ளார்.
பல விசயங்களை கால்பந்திற்கு புதியவர்களுக்கு விளக்குவது போல எழுதியுள்ளார். பல பகுதிகளில் அமெரிக்க கால்பந்து கலாச்சாரம் வருகிறது . பெரும்பாலான எடுத்துக்காட்டுகளை பெண்கள் கால்பந்திலிருந்து கூறியுள்ளார். நான் வாசித்த மற்ற பல கால்பந்து புத்தகங்களில் பெண்கள் கால்பந்திற்கு இவ்வளவு இடம் இல்லை அதுவே இப்புத்தகத்தின் மிக பெரிய பலம்.இந்த புத்தகத்தின் highlight இங்கும் அங்குமாக வரும் முன்னாள் வீரர்களைப் பற்றிய சுவாரசியமான துணுக்குகள்தான்.
இப்போதோ மதியம் மழை வரலாம் இல்லையென்றால் விதியைப் ஓடுவது சற்று