பதின்னெட்டு ஆண்டுகளுக்கு பிறகு சலீம் மற்றும் சிலர் விடுவிக்கப் படுகிறார்கள். சிறைச்சாலையை இடித்துவிட்டார்கள். அவர்கள் அனைவரும் பட்ட துயரத்தின் சின்னம் இனிமேல் உலகில் இல்லை ஆனால் துயரத்தின் வடு என்றும் அவர்களோடு இருக்கும். இந்த கதை உண்மை சம்பவத்தைத் தழுவியது.சுயசரிதை போன்ற தோற்றத்தைத் தந்தாலும் இது சுயசரிதை அல்ல.பல இடங்களில் எனக்கு கண்ணீர் வந்தது. வார்த்தைகளால் சொல்ல முடியாத ஒருவித உணர்ச்சி. இக்கதை மனிதனின் துயரத்தை மட்டும் பேசவில்லை அவனின் வாழ்வு போராட்டத்தின் மகத்துவதைத்தான் அதிகமாக பேசுகிறது.
இது நான் வசிக்கும் தாஹர் பென் ஜீலோவ்னின் இரண்டாவது புத்தகம். இதுவே இரண்டில் சிறந்தது.தமிழில் எஸ்.அர்ஷியாவால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. சில இடங்களில் வாசிக்க கடினமாக இருந்தது. முக்கியமாக பெயர்கள். நான் பலப் பக்கங்களை ஆங்கிலத்திலும் வாசித்தேன் .இது பல பெரிய பரிசுகள் பெற்ற படைப்பு. இந்த புத்தகத்தின் ஆங்கில பெயர் -"This Blinding Absence Of Light".
கண்டிப்பாக வாசிக்க வேண்டிய புத்தகம்.
விடுவது நலம். ஏனெனில் இரண்டுமுதல் ஏழு வரையிலான எல்லா வேற்றுமை உருபுகளின் உடன் தொக்க