தமிழ் கலாச்சாரம் நன்னடத்தை நன்றியுணர்ச்சி கெட்டுப்போய்விட்ட காலமிது.
இவ்வாறு எழுதப்பட வேண்டும் அது. தமிழும் கலாச்சாரமும் நன்னடத்தையும் நன்றியுணர்ச்சியும் கெட்டுப்போய்விட்ட காலமிது’ என்று நாம் உம்மைத் தொகையாய் விரித்துப் பொருள்கொள்வோம். அங்கே வலி மிகாது. உம்மைத் தொகையாய் எழுதப்படவேண்டிய வாக்கியங்களைத்தாம் நாம் இப்போது காற்புள்ளியிட்டு எழுதுகிறோம்.
உம்மைத் தொகையாய்க் கருதி எழுதப்படவில்லை எனில்... அடுத்து வேற்றுமைத் தொடரா, தொகையா, உடன் தொக்க தொகையா என்று பார்க்க வேண்டும்.
தமிழ் கலாச்சாரம்.
தமிழைக் கலாச்சாரம் ? இல்லை. ஐ வராது. இரண்டாம் வேற்றுமை தொடர், தொகை, உடன் தொக்க தொகை இல்லை.
இப்படி ஒவ்வொரு வேற்றுமை உருபாகப் பொருத்திப் பார்த்துக்கொண்டே வரவேண்டும். எது பொருள் சிறக்கும்படி, கூற நினைத்த பொருளோடு பொருந்துகிறது என்று பார்க்க வேண்டும்.
ஐயங்கார் ஒருவர் துளசி தீர்த்தப் பாத்திரத்தோடும், “ஹரிஜன சமூகத்தாருக்கு வள்ளூவப் பண்டாரம்