இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் என்று சொற்களின் வகைமைகள் விரிகின்றன. நிற்க.
ஒரு சொல்லும் இன்னொரு சொல்லும் சேர்ந்தால் சொற்றொடர் (சொற்களின் தொடர்வரிசை) ஆகும். தமிழ் என்பது சொல். தமிழ்மொழி என்பது சொற்றொடர்.
சொற்றொடர்களின் வகைமைகள் இவை. அந்தந்த வகைமைகளுக்கு வலிமிகுமா என்பதை எடுத்துக்காட்டின் வழியே புரிந்துகொள்ளலாம். அச்சொற்றொடர்களுக்கான எடுத்துக்காட்டாக தமிழ் என்ற சொல்லையே பயன்படுத்தி இருக்கிறேன். கீழே காண்க !
1. எழுவாய்த் தொடர் - எழுவாய் பயனிலையாய் இருப்பது.
தமிழ் சிறந்தது - வலிமிகாது.
2. விளித்தொடர் - முதற்சொல் விளிப்பது.
தமிழே பாட்டில் நடமாடு - வலிமிகாது
சேர்ந்தால் சொற்றொடர் சொற்களின் தொடர்வரிசை ஆகும். தமிழ் என்பது சொல். தமிழ்மொழி என்பது