2
5
ஓட ஆரம்பித்தவுடன் ஞாபகத்தில் வந்தது தமிழ் இலக்கிய சண்டைகள். facebook-ல் இன்று காலை வாசித்தேன். ஒரு படைப்பின் மேல் வைக்கப்படும் விமர்சனத்தை விட்டுவிட்டு அவர் அந்த ஊர்க்காரர் அதனால் அவர் எப்படி இந்த ஊர் எழுத்தாளர்களின் படைப்பு பற்றி விமர்சிக்கலாம் என்று கூறுவதை எப்படி ஏற்றுக் கொள்வது. ஒரு விமர்சகர் அவரின் பார்வையில் ஒரு விமர்சனத்தை பொதுவெளியில் வைக்கிறர். அதை ஏற்றுக்கொள்வதும் எதிர்ப்பதும் அவர் அவரின் உரிமை. நல்ல விசயங்களை எடுத்துக் கொண்டு முன்னே செல்வதுதான் ஒரு படைப்பாளிக்கு அழகு. இரண்டு வருடங்களுக்கு முன் ஜெயமோகனின் சிங்கப்பூர் வருகை பெரும் சர்ச்சைக்குளானது. தேவையில்லாத வாக்குவாதங்கள் போலீஸ் கேஸ் வரை சென்றது. அதை நினைத்துக் கொண்டே ஓடி முடித்தேன்.
விமர்சகர் அவரின் பார்வையில் ஒரு விமர்சனத்தை பொதுவெளியில் வைக்கிறர்.