உச்ச நீதிமன்ற வக்கீலும் எழுத்தாளருமான அபினவ் சந்திரசூட் பிளேக் நோயின் போது ஆங்கிலேய அரசு எடுத்த நடவடிக்கைகளும் அதற்கு மக்கள்பால் எழுந்த அதிருப்தி பற்றியும், முக்கியம பால கங்காதர திலகரால் தூண்டப்பட்ட மருத்துவர்களை கொன்ற சாப்பேக்கர் சகோதரர்கள் பற்றியும் அருமையான கட்டுரை எழுதியுள்ளார்.
1896-இல் மும்பையில் பிளேக் நுழைந்தது. நோய் பீடித்த 80 சதவீதத்தினர் செத்து மடிந்தனர். ஆங்கிலேய அரசு நோயைச் சமாளிக்க ஒரு சட்டத்தை அமல் செய்தது. அச்சட்டத்தின் படி வீடு வீடாக அதிகாரிகள் உட் புகுந்துச் சோதனைச் செய்யவோ, நோயுற்றவர்களை இழுத்துச் செல்லவோ முடியும். அப்போது சமீபத்தில் அறிமுகமான புகைவண்டிகளிலும் பிரயாணிகளை சோதிக்கவோ இழுத்துச் செல்லவோ முடியும். உடல் முழுதும் சநாதனம் ஊறிப் போன பிராமணரான திலகருக்கு கோபம் வந்தது. திலகர் தன் பத்திரிக்கையில் மராட்டிய மன்னன் சிவாஜி காலத்தில் யாராவது நம் வீட்டுப் பெண்கள் மேல் கை வைத்திருப்பார்களா என்று தலையங்கம் எழுதினார்.
ஆங்கிலேய அரசு எடுத்த நடவடிக்கைகளும் அதற்கு மக்கள்பால் எழுந்த அதிருப்தி பற்றியும்,