வேடிக்கையாக’. இல்லை ஏதாவது சொல்லுங்கள் என்று அழுத்திக் கேட்டதற்குப் பாரதி தனக்கு “திராவிடர், ஆதி திராவிடர், ஆரியர், என்ற வேற்றுமையும் பிடிக்காது; எல்லா மக்களும்” சமம் என்று சொல்லச் சொல்கிறார்.
பாரதி பற்றிய சொற்சித்திரமும் கனகலிங்கமும்
பாரதி பற்றித் தகவல்கள் மூலம் ஒரு சித்திரத்தை கனகலிங்கம் அளிக்கிறார். பாரதி கொடுமையான வறுமையை அனுபவித்த காலங்கள் அவை. எழுதுவதற்குக் காகிதம் வாங்க தன்னிடம் உள்ள பழைய செய்தி தாள்களை விற்றுக் காகிதம் வாங்குவாராம் பாரதி. வீட்டு மாடியில் வெற்று மேல் உடம்போடு தலைமுடி காற்றில் அசைய சக்தி பூஜை செய்தோ அல்லது பிரமைப் படித்து உலவியோ அயலாரை பாரதி பயமுறுத்தியிருக்கிறார்.
அதற்கு மேலாகப் பொதுப் புரிதலில் கனகலிங்கத்தின் ஜாதியை வைத்து அவரைப் பற்றி இருக்கும்