தன் வீட்டில் வந்து உட்கார்ந்து கொண்டு சாப்பாடு வரவழைத்துச் சாப்பிட்ட பாரதி பற்றிச் சொல்லிவிட்டுப் பின் வருமாறு எழுதுகிறார்:
“என் குருநாதர் பாரதியார் ஹரிஜங்களின் சுகதுக்கத்தைத் தமதாக்கிக் கொண்டார். இத்தகைய வாழ்க்கையில் பிறந்தது தான்,
தஞ்சம் உலகினில் எங்கணுமின்றித் தவித்துத் தடுமாறி
பஞ்சைப் பறையன் அடிமை புகுந்தேன்
பாரமுனக்காண்டே! ஆண்டே! பாரமுனக்காண்டே’”
முதலாம் உலகப்போரின் சமயம் கனகலிங்கமும் பாரதியும் பிரிந்து விடுகிறார்கள். கனகலிங்கம் குமாஸ்தா வேலைக்காக மெஸொப்பொட்டேமியா போய்விடுகிறார். அவர் திரும்பி வரும் போது பாரதி சென்னைக்குப் போய் விடுகிறான். பணிக்காலம் முடிந்து புதுவை திரும்பிய கனகலிங்கம் தானும் சென்னைக்குப் போய் விடுகிறார். சென்னையில் அக்காலத்தில் ஹரிஜனங்களிடையே ‘திராவிடர்’, ‘ஆதி திராவிடர்’ அரசியல் மும்முரமாக இருந்ததையும் அக்கூட்டங்களுக்குத் தான் போனதையும் அங்கு எங்குமே பாரதியை காணாததையும் கனகலிங்கம் பதிவுச் செய்கிறார்.
சித்திரத்தை கனகலிங்கம் அளிக்கிறார். பாரதி கொடுமையான வறுமையை அனுபவித்த காலங்கள்