தீண்டாமைப்பிணி இருக்கவே இருக்க முடியாது” என்று சூளுரைச் செய்கிறான். தேசிய கீதங்களை ஏன் கும்மி, காவடிச் சிந்து, நொண்டிச் சிந்து வகையில் மெட்டமைத்தார் என்ற கேள்விக்கு “என் பாட்டு தேசிய கீதமானதால், மூட்டை தூக்கும் ஆள் முதற்கொண்டு பாகவதர் வரையில் சுலபமாகப் பாடவேணும்” என்று பதில் சொல்கிறான்.
வ.ரா போன்றவர்களின் பாரதி பற்றிய பார்வைக்கும் கனகலிங்கத்தின் பார்வைக்குன் இங்குத் தான் வித்தியாசம் காண முடிகிறது. மீண்டும் மீண்டும் கனகலிங்கம் சேர்ந்துண்பது, சேர்ந்து இருப்பது, சாதிய வித்தியாசங்களின் நிலவரம் ஆகியவற்றைக் கவனப்படுத்துகிறார். இந்நூலின் இன்னொரு சிறப்பு ஆசிரியர் மிக அழகாக ஆங்காங்கே பாரதியின் கவிதைகளைப் பயன்படுத்தியிருப்பார்
மெஸொப்பொட்டேமியா போய்விடுகிறார். அவர் திரும்பி வரும் போது பாரதி சென்னைக்குப் போய்