கனகலிங்கம் சில காலமாகப் பாரதி தனக்கு வேத மந்திரங்கள் கற்றுக் கொடுத்துப் பின்னர் ஒரு நாள் உபநயணம் செய்விப்பதாகச் சொல்லி வீட்டுக்கு அழைத்ததையும், அங்கிருந்த பாரதியின் நண்பர்களையும் நினைவுக் கூர்கிறார். பாரதியின் வீடு வைபவத்திற்குத் தயார் செய்யப்பட்டிருந்தது. “கூடத்தில் லட்சுமி, ஸரஸ்வதி, கிருஷ்ணன்” ஆகியவரின் அலங்கரிக்கப்பட்ட படங்கள் இருந்தன என்றும் கிருஷ்ணனின் படத்துக்கு அடியில் “பிச்சுவா” கத்தி இருந்தது என்றும் குறிப்பிடுகிறார். இக்குறிப்புகள் வ.ராவின் புத்தகத்தில் இல்லை.
கனகலிங்கத்துக்குப் பூணூல் மாட்டியது குறித்து யாரேனும் தன்னுடன் வாதம் ஆரம்பிக்க மாட்டார்களா என்றும் அப்படிச் செய்தால் “வேத முனிவர்களின் பரந்த மனப்பான்மையையும், உண்மையான இந்து மதத்தின் உயர்ந்த லட்சியங்களையும்” பற்றி எடுத்துரைக்கப் பாரதி ஆவலாக இருந்தாராம்.
மெஸொப்பொட்டேமியா போய்விடுகிறார். அவர் திரும்பி வரும் போது பாரதி சென்னைக்குப் போய்