2
11
குவளைக்கண்ணனும் கனகலிங்கமும்
கனகலிங்கத்தோடு கல்வே பள்ளியில படித்த இன்னொருவர் குவளைக்கண்ணன் என்று அறியப்படுகின்ற கிருஷ்ணமாச்சார்யார். ‘எனது நண்பர் குவளைக்கண்ணன்’ என்று கனலிங்கம் குறிப்பிடுகிறார். பள்ளிக் கால நட்பைக் குறிப்பிடுகிறாரா இல்லை பின்னால் பாரதியின் மூலம் நண்பரானதை குறிப்பிடுகிறாரா என்று தெரியவில்லை. இதில் இருந்து நமக்குத் தெரிவது கனகலிங்கம் படித்தவர் என்பதோடு பிராமணர்கள் பயின்ற பள்ளியிலேயே பயின்றார் என்பது. அப்பள்ளியில் பயின்ற இன்னொரு பாரதி நண்பர் டி. விஜயராகவாச்சார்யார்.
குவளைக்கண்ணன் பெருமாள் கோயில் பட்டாச்சார் வேலைப் பார்த்ததோடு இன்னொரு வேலையும் அவ்வப்போது செய்தார் என்கிறார்
கோவிலுக்கு அருகே உள்ள கோட்டையை எடுப்பித்து கட்டியது நாயக்க