2
10
கனகலிங்கத்தின் கல்வியும் பாரதியின் அறிமுகமும்
கனகலிங்கத்தின் நூலுக்கு எஸ். வையாபுரிபிள்ளையும், பி.ஶ்ரீ. ஆசார்யாவும் எழுதிய முன்னுரைகளின் காலத்தை வைத்துப் பார்க்கும் போது இந்நூல் 1947-இல் வெளி வந்திருக்கலாம் என்று தெரிகிறது. இந்நூல் பாரதியைப் பற்றி மட்டுமல்ல அக்காலச் சாதியம் பற்றியும் தகவல்களை அளிக்கிறது. எழுத்து நடையும் அபாரம். கனகலிங்கத்துக்குப் பாரதி பூணூல் மாட்டி விட்டார் என்கிற கதையில் மறக்கப்பட்ட (அல்லது மறைக்கப்பட்ட உண்மை) கனகலிங்கத்தின் பின்புலம்.
கனகலிங்கம் 1907-இல் பாரதி புதுவை வந்ததாக நினைவிலிருந்து எழுதுகிறார். பாரதி புதுவைக்கு வந்தது 1908-இல். 1907-இல் கனகலிங்கம் புதுவையின் பாரம்பர்யமிக்கக் கல்வே பள்ளியில் படித்துக் கொண்டிருந்தார்,
கோவிலுக்கு அருகே உள்ள கோட்டையை எடுப்பித்து கட்டியது நாயக்க