அவரு சட்டையிலே இருக்குத பையிலே வச்சிருக்கப்பட்ட வண்டாக்கும் இது. அடிக்கடி அருமையாட்டு எடுத்து பார்த்துக்கிடுவாரு. யோசேப்பு அண்ணன் சொன்னாரு” ஜான்சன் சொன்னான்
“நீ அவருகிட்ட சொன்னியா?” என்று லாசர் பீதியுடன் கேட்டான்.
“இல்லே…அவராக்கும் எனக்க கிட்ட கேட்டது. இந்தமாதிரி இருக்கும்லே, நீ கண்டியான்னு கேட்டாரு. அப்பமே நான் கண்டுபிடிச்சுப்போட்டேன்… அது காணாமப்போச்சுன்னு பெரியசாமியாரு தேடிட்டிருக்காரு. அண்ணனுக்க கிட்ட தேடிப்பாக்க சொல்லியிருக்காரு” என்றான் ஜான்சன்.
லாசர் “விலையுள்ள வண்டாக்கும்லே” என்றான்.
ஜான்சன் “ஆமா, லண்டன் வண்டுல்லா?” என்றான்.
ஜான்சன் “எங்கலே வச்சே?” என்றான்.
“திருப்பி குடுத்திருவோம்லே…அவரு ஏசு சாமிக்க சாமியாராக்கும்” என்றான் லாசர்
“பத்து பைசாவுக்கு விக்கலாமே”என்றான் ஜான்சன்
அவன் ஜான்சனை அக்கானிப்புரைக்கு பின்னால் கூட்டிச்சென்றான். பனையோலையை அகற்றி கலத்தை வெளியே எடுத்தான். குச்சியால் சருகுகளை விலக்கி பார்த்தான். வண்டு இருந்தது. இலைகள் வாடியிருந்தன
அவர் அதைக் கொண்டுசென்று மேஜைமேலிருந்த சிலுவைப்பாடுச் சிலையின் கீழே வைத்தார்