குருசிக் கிளவிய புதைச்சது மாதிரியா?” என்றான் லாசர்.
“ஆமா” என்று ஜான்சன் சொன்னான். “பெட்டியிலே வைச்சு புதைப்பாவ”
லாசர் சற்றுநேரம் யோசித்துவிட்டு “அப்டியாக்கும் கர்த்தர்கிட்ட போறது இல்லியா?” என்றான்.
“ஆமா” என்று ஜான்சன் சொன்னான்.
“கிளவி அங்க இப்பம் இருபபா.. இவள கண்டதும் வா பிள்ளேண்ணு விளிப்பா. கிளவி அருமையானவளாக்கும்”
லாசர் மேலும் குரல்தாழ்த்தி “இனி நான் குட்டிய பாக்கணுமானா கர்த்தர்கிட்ட போகணுமா?” என்றான்.
“நாம கொறே பிந்தி போவலாம்லே” என்றான் ஜான்சன். “நாம பள்ளிக்கொடத்திலே படிக்கணும்லா?”
லாசரின் வீட்டுக்கு சவப்பெட்டி சென்றது. மரியான் அண்ணா அதை தூக்கிச் சென்றார். சிறிய பெட்டி. குட்டி சிறிய உடல் கொண்டவள். அவளை அவன் தவளை என்றுதான் அழைப்பான்.
மண்ணிலே புதைச்சு வைக்கிறது” என்றான் ஜான்சன். அவனும் ரகசியமாகத்தான் சொன்னான்