2
28
சபை கலைந்தபோது வேதம் வாத்தியார் “அமைதி அமைதி” என்றார். “ஏட்டி அந்தபிள்ளைய வெளியே கொண்டுபோ” என்று ஆணையிட்டார்.
மறுநாளே லாசர் குணமாகிவிட்டான். அவன் வாய் மட்டும் கசந்தது.கைகால்களில் கடுமையான ஓய்ச்சல் இருந்தது. அது இனிமையாகவும் தோன்றியது. கண்களை திறந்தபோது ஒளி கூசி கண்ணீர் வழிந்தது. அவன் சுருண்டு பாயில் படுத்துக்கொண்டான். காதில் தொலைவிலுள்ள ஓசைகள் கூட கேட்டுக்கொண்டிருந்தன
வீட்டில் சமையல்வேலை அனைத்தையும் எசிலிக்கிழவிதான் செய்தாள். அம்மா எதையுமே செய்யாமல் பின்திண்ணையிலேயே அமர்ந்திருந்தாள். அப்பா பனையேறப் போகவில்லை. பத்துநாள் அவர் பனையேற வேண்டியதில்லை என்றும். அவருடைய கூறு பனைகளை மற்றவர்கள் பங்கிட்டு ஏறிக்கொள்வது என்றும் முடிவுசெய்திருந்தார்கள்.
மனதை தெரிவிக்கும் பொருட்டு மட்டும் எழுதப்படுபவை. ஆகவே உதிரிச் சொற்றொடர்கள் மட்டுமே கொண்டவை. அவற்றை வெளியிடுவதில்லை