ஆச்சரியமாக அவன் ஒரு வெள்ளையன். இருபது வயதான இளைஞன். நீண்ட சிறிய முகம். கோடு போன்ற உதடுகள். பச்சைக்கண்கள். சிவப்புத் தலைமயிர்
அவன் அருகே வந்து புன்னகைத்தான்.
சூசன்னா பதற்றத்துடன் “உதவி… உதவி நாங்கள் இங்கே சிக்கிக் கொண்டிருக்கிறோம். வழிதவறிவிட்டிருக்கிறது.. நீ ஆங்கிலம் பேசுவாயா? பிரெஞ்சு?” என்றாள்.
அவன் புன்னகைத்து சொல்லுங்கள் என்பதுபோல தலையசைத்தான்.
“அருகே எங்கே கிராமம் இருக்கிறது? எங்கே நாங்கள் செல்லவேண்டும்?”
அவன் தெற்கே செல்லும் ஒரு சிறிய மலையிடுக்கைச் சுட்டிக்காட்டினான்.
“நீ என்ன செய்கிறாய் இங்கே? நீ யார்? இங்கே ஏதாவது மலையேற்ற முகாமில் இருக்கிறாயா?”
அவன் ஏதும் சொல்லாமல் தலைவணங்கி முன்னால் சென்று மறைந்தான்.
அவள் அவனை பதைப்புடன் பார்த்திருக்கையில் பெட்ரூஸ் கையில் குதிரையின் கடிவாளத்தை பிடித்தபடி வந்தார். “இது சலிப்புற்றிருக்கிறது. நம்மை விட்டுவிட்டுச் செல்ல விரும்புகிறது” என்றார்.
அங்கேருந்து இங்க வரை நடந்து வந்திருக்காரு எதுக்கு ஏலே இந்த தேரிக்காட்டிலே இந்த இடையான்குடியிலே