read.cash Log in

@G4ceTech

Joined 8 May 2020 · 112 posts

120 KT

0 KT · $2.33 received · 0 KT given

Posts

@G4ceTech

Kapga Third History Tamil Part 07 ''(புண்ணியத்தைத் தேடி) மூன்று பள்ளிவாசல்களைத் தவிர வேறு எங்கும் பயணம் மேற்கொள்ளக் கூடாது. 1. அல் மஸ்ஜிதுல் ஹராம், 2. மஸ்ஜிதுன் நபவி, 3. மஸ்ஜிதுல் அக்ஸா'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அபூஸயீதுல் குத்ரீ (ரலி) புகாரி 1189 மேலும் செல்வமும், உடல் வலிமையும் உடையவர்கள் தம்முடைய வாழ்நாளில் ஒரு தடவையாவது ''கஃபா'' ஆலயம் சென்று ''ஹஜ்'' செய்வது கட்டாயக் கடமையாகும். அந்த ஆலயத்தில் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது, சென்று வர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமை. (அல்குர்ஆன் 3:97) அளவற்ற நன்மை 'கஅபா' ஆலயத்தில் தொழுகின்ற ஒரு தொழுகை மற்ற பள்ளிகளில் தொழுகின்ற ஒரு இலட்சம் தொழுகைகளை விட அதிகமான நன்மைகள் நிறைந்ததாகும். என்னுடைய பள்ளி (மஸ்ஜிதுன் னபவி)யில் தொழுவது மற்ற பள்ளிகளில் தொழுகின்ற ஆயிரம் தொழுகைகளை விடச் சிறந்ததாகும். அல் மஸ்ஜிதுல் ஹராம் (கஅபா)வைத் தவிர! (ஏனென்றால் அதற்கு அதை விட அதிகமான நன்மைகள் உள்ளது.) அபூஹுரைரா (ரலி) புகாரி 1190

@G4ceTech

Kapga Third History Tamil Part 05 நபி (ஸல்) அவர்கள், ''அல்லாஹ்விடத்தில் மூன்று நபர்கள் மிகவும் வெறுப்புக்குரியவர்கள். 1. ஹரம் ஷரீஃபில் அநீதியின் மூலம் குற்றம் புரிபவன், 2. இஸ்லாத்தில் அறியாமைக் கால நடைமுறையை நாடக்கூடியவன், 3. தகுந்த காரணமின்றி ஒரு உயிரைப் பறிக்க நாடுபவன். இப்னு அப்பாஸ் (ரலி) புகாரி 6882 காஃபிர்கள் நுழைவதற்குத் தடை இஸ்லாமிய வணக்கத்தலங்களான பள்ளிவாசல்களுக்கு மற்றவர்கள் வருவதை இஸ்லாம் தடுக்கவில்லை. ஆயினும் உலகின் ஒரே இறைவனை வணங்குவதற்கு எழுப்பப்பட்ட முதல் ஆலயமான கஃபா மற்றும் அதன் வளாகத்திற்கு மட்டும் பல கடவுள் நம்பிக்கை கொண்டவர்களை அனுமதிக்கக்கூடாது என அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான். நம்பிக்கை கொண்டோரே! இணை கற்பிப்போர் அசுத்தமானவர்களே. எனவே அவர்கள் மஸ்ஜிதுல் ஹராமை இவ்வாண்டுக்குப் பின் நெருங்கக் கூடாது (அல்குர்ஆன் 9:28) ஹஜ்ஜத்துல் வதாவுக்கு முந்தைய வருடம் நபி (ஸல்) அவர்கள் அபூபக்கர் (ரலி) தலைமையில் மக்களை ஹஜ்ஜுக்கு அனுப்பி வைத்தார்கள். துல்ஹஜ் பிறை பத்தாம் நாள், ''எச்சரிக்கை! இந்த வருடத்திற்குப் பின்னர் இணை வைப்பவர்கள் யாரும் ஹஜ் செய்யக் கூடாது. கஅபாவை நிர்வாணமாகத் தவாஃப் செய்யக் கூடாது'' என அறிவிக்கச் செய்தார்கள். அபூஹுரைரா (ரலி) புகாரி 1622

@G4ceTech

Kapga Third History Tamil Part 04 நகரங்களின் தாயான மக்காவிற்கு இறைவன் வழங்கியுள்ள சிறப்பு அம்சங்களில் சில: அங்கு கொலை செய்வதோ, போர் புரிவதோ கூடாது. மேலும் அங்குள்ள வேட்டைப் பிராணிகளை விரட்டுவதும், மரங்களை வெட்டுவதும், செடி, கொடிகளைப் பறிப்பதும் கூடாது. ''அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின் போது (மக்களிடையே) எழுந்து நின்று, ''அல்லாஹ் வானங்களையும், பூமியையும் படைத்த போதே மக்காவை புனிதப்படுத்தி விட்டான். ஆகவே, அது அல்லாஹ் புண்ணியப்படுத்திய காரணத்தால் இறுதி நாள் வரை புனிதமானதாகும். எனக்கு முன்பும் எவருக்கும் இங்கு போர் புரிவது அனுமதிக்கப் படவில்லை. எனக்குக் கூட சிறிது நேரம் மட்டுமே இங்கு போர் புரிய அனுமதிக்கப்பட்டது. இங்குள்ள வேட்டைப் பிராணிகளை விரட்டக் கூடாது, இங்குள்ள மரங்களை வெட்டக் கூடாது. இங்குள்ள புற்பூண்டுகளைக் கிள்ளக் கூடாது. பிறர் தவற விட்ட பொருளை அதை அறிவிப்பவர் தவிர வேறெவரும் எடுக்கக் கூடாது'' என்று சொன்னார்கள். உடனே அப்பாஸ் பின் அப்துல் முத்தலிப் (ரலி) அவர்கள் ''அல்லாஹ்வின் தூதரே! 'இத்கிர்' எனும் புல்லைத் தவிரவா? ஏனெனில், அது உலோகத் தொழிலாளர்களுக்கும், வீடுகளுக்கும் தேவைப்படுகின்றதே'' என்று கேட்க நபி (ஸல்) அவர்கள் (சிறிது நேரம்) மௌனமாயிருந்து விட்டு பிறகு ''இத்கிரைத் தவிர தான். ஏனெனில் அதை வெட்டிப் பயன்படுத்துவது அனுமதிக்கப்பட்டதாகும்'' என்று பதிலளித்தார்கள். இப்னு அப்பாஸ் (ரலி) புகாரி 4313, 1834 புனிதமிக்க மக்கா நகரில் பாவமான காரியங்களைச் செய்வோருக்குக் கடுமையான வேதனை உள்ளது என அல்லாஹ் எச்சரித்துள்ளான். (ஏக இறைவனை) மறுத்தோருக்கும், அல்லாஹ்வின் பாதையை விட்டும், மஸ்ஜிதுல் ஹராமை விட்டும் தடுத்தோருக்கும், மற்றும் அங்கே அநீதியின் மூலம் குற்றம் புரிய நாடுவோருக்கும் துன்புறுத்தும் வேதனையைச் சுவைக்கச் செய்வோம். (அல்குர்ஆன் 22:25)

@G4ceTech

Kapga Third History Tamil Part 03 '(முஹம்மதே!) யானைப் படையை உமது இறைவன் எப்படி ஆக்கினான் என்பதை நீர் அறியவில்லையா? அவர்களின் சூழ்ச்சியை அவன் தோல்வியில் முடிக்கவில்லையா? அவர்களிடம் பறவைகளைக் கூட்டம், கூட்டமாக அனுப்பினான். சூடேற்றப்பட்ட கற்களை அவர்கள் மீது அவை வீசின. உடனே அவர்களை மெல்லப்பட்ட வைக்கோல் போல் ஆக்கினான். (அல்குர்ஆன் 105:1-5) மேலும் கியாமத் நாள் நெருங்கும் போது ஒரு படை 'கஅபா'வை இடிப்பதற்காகப் படையெடுத்து வருவார்கள். அல்லாஹ் அவர்களையும் அழித்து கஅபாவைப் பாதுகாப்பான் என்ற செய்தியை பின்வரும் நபிமொழி மூலம் அறிந்து கொள்ளலாம். ''ஒரு படையினர் கஅபாவின் மீது படையெடுப்பார்கள். வெட்ட வெளியான ஒரு பூமியில் அவர்கள் இருக்கும் போது அவர்களில் முதலாமவர் முதல் கடைசி நபர் வரை உயிருடன் பூமிக்குள் புதையுண்டு போவார்கள்'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ''அல்லாஹ்வின் தூதரே! அவர்களில் முதலாம் நபர் முதல் கடைசி நபர் வரை எவ்வாறு புதையுண்டு போவார்கள்? அங்கு அவர்களைச் சேராதவர்களும் இருப்பார்கள். கடைவீதிகளும் இருக்குமே!'' எனக் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ''முதலாமவர் முதல் கடைசி நபர் வரை புதையுண்டு போகத் தான் செய்வார்கள். எனினும் அதற்குப் பிறகு அவரவரது எண்ணத்திற்கேற்ப எழுப்பப் படுவார்கள்'' என்று கூறினார்கள். ஆயிஷா (ரலி) நூல்: புகாரி 2118 இறைவன் 'கஅபா' ஆலயத்திற்கு தன்னுடைய நேரடிப் பாதுகாப்பை வழங்கியிருப்பது அதனுடைய சிறப்பைக் காட்டுகிறது. கொலை, போர் செய்தல் கூடாது

@G4ceTech

Kapga Third History Tamil Part 02 அல்லாஹ் அவருடைய பிரார்த்தனையை ஏற்று மக்காவைப் பாதுகாப்பு மையமாக ஆக்கினான். திருக்குர்ஆன் அபயபூமி என அறிவித்து 14 நூற்றாண்டுகளைக் கடந்த பின்பும், எத்தனையோ ஆட்சி மாற்றங்கள் நடந்த பின்பும் அது இன்றளவும் அபயபூமியாகவே உள்ளது. 14 நூற்றாண்டுகளாக எந்தத் தாக்குதலுக்கும் உள்ளாகாத வரலாற்று சிறப்பு மிக்க ஆலயமாகவும் இது இருந்து வருகிறது. குர்ஆன் இறைவனின் வார்த்தைகள் தான் என்பதற்கு இது மிகப் பெரும் சான்றாக அமைந்துள்ளது. மேலும் உலகத்தில் விளைகின்ற அனைத்து கனி வர்க்கங்களும் மக்காவில் தாராளமாக வந்து குவிந்து கொண்டிருப்பதும், இது இறைவனின் வார்த்தைகள் என்பதற்குச் சான்றாகத் திகழ்கிறது. அல்லாஹ்வுடைய பாதுகாப்பு 'கஅபா' ஆலயத்திற்கு அல்லாஹ் தன்னுடைய நேரடிப் பாதுகாப்பை வழங்கியுள்ளான். கியாமத் நாள் வரை அதை எந்தப் படையாலும் அழித்து விட முடியாது. பின்வரும் வரலாற்றுச் சம்பவம் அதற்குச் சிறந்த சான்றாகும். அப்ரஹா எனும் மன்னன் தன்னுடைய யானைப் படையுடன் கஅபாவைத் தகர்ப்பதற்காக வந்தான். அவனை எதிர்த்துப் போராடக் கூடிய எந்தப் படையும் அப்போது மக்காவில் இல்லை. என்றாலும், அல்லாஹ் ஒரு வகையான பறவைகளை அனுப்பி, அந்த யானைப் படையை அழித்து தன்னுடைய ஆலயத்தைப் பாதுகாத்தான். இதைப் பற்றி அல்லாஹ் கூறுகிறான்:

@G4ceTech

Kapga Third History Tamil Part 01 அபயம் அளிக்கும் புனிதத் தலத்தை அவர்களுக்காக வசிப்பிடமாக நாம் ஆக்க வில்லையா? ஒவ்வொரு கனி வர்க்கமும் நம்மிடமிருந்து உணவாக அதை நோக்கிக் கொண்டு வரப்படுகிறது. எனினும் அவர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள். (அல்குர்ஆன் 28:57) அதில் நுழைந்தவர் அபயம் பெற்றவராவார். (அல்குர்ஆன் 3:97) இப்ராஹீம் (அலை) அவர்களின் 'துஆ'வின் காரணத்தால் அல்லாஹ் மக்காவைப் புனித நகரமாக்கினான். நபி (ஸல்) கூறினார்கள், ''இப்ராஹீம் (அலை) மக்காவை புனிதமாக்கினார். அதற்காக பிரார்த்தனை செய்தார். இப்ராஹீம் மக்காவைப் புனிதமாக்கியது போல் நான் மதீனாவைப் புனிதமாக்கி உள்ளேன். நபி இப்ராஹீம் (அலை) மக்காவிற்காக பிரார்த்தனை செய்தது போல், நான் மதீனாவிற்கு அதனுடைய ஸாவு (என்ற அளவையிலும்) முத்து (என்ற அளவையிலும் அபிவிருத்தி செய்யுமாறு) பிரார்த்தனை செய்துள்ளேன். அப்துல்லாஹ் இப்னு ஸைத் (ரலி) புகாரி. இப்ராஹீம் நபி செய்த பிரார்த்தனையை திருக்குர்ஆனில் அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான். ''இறைவா! இவ்வூரைப் பாதுகாப்பு மையமாக ஆக்குவாயாக! இவ்வூராரில் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பியோருக்குக் கனிகளை வழங்குவாயாக!'' (அல்குர்ஆன் 2:126)

@G4ceTech

Kapga Second History Tamil Part 05 'நபி (ஸல்) அவர்கள் ''ஹஸ்வா'' என்ற ஒட்டகத்தின் மீது நின்றவர்களாக மக்காவை நோக்கி, ''நீ தான் அல்லாஹ்வுடைய பூமியில் சிறந்த ஊராவாய்! அல்லாஹ்வுடைய பூமியில் மிகவும் விருப்பத்திற்குரிய ஊராவாய்! என்னுடைய சமுதாயம் (உன்னை விட்டும்) என்னை வெளியேற்றி இருக்காவிட்டால் நான் வெளியேறி இருக்க மாட்டேன். (ஆனால், அவர்களோ என்னை வெளியேற்றி விட்டார்கள்.)'' என்று கூறினார்கள். அப்துல்லாஹ் பின்அதீ (ரலி) திர்மிதீ 3860 மக்காவை நோக்கி நபி (ஸல்) அவர்கள் கூறிய இச்சொற்கள், அவர்கள் மக்காவின் மீது கொண்டுள்ள அளப்பரிய பற்றை வெளிப்படுத்துகிறது. அபய பூமி மக்கமா நகரத்தை அல்லாஹ் அபயமளிக்கக் கூடிய பூமியாக ஆக்கியுள்ளான். அல்லாஹ் கூறுகிறான்:

@G4ceTech

Thippu Sultan Rajini Tamil Story தமிழர்களை துரத்தியடித்த திப்புசுல்தானை சிறந்த சுதந்திர போராட்ட தியாகியாக சித்தரிப்பதற்கான முயற்சிதான் இந்த பட தயாரிப்பு. முன்னாள் முதல்– அமைச்சர் எம்.ஜி.ஆரின் மூதாதையர்கள் கொங்கு நாட்டில் உள்ள பொள்ளாச்சியை சேர்ந்தவர்கள். அந்த பகுதி மைசூர் சமஸ்தானத்தில் ஐதர் அலி ஆளுகையில் இருந்த போது இந்துக்களை மதம் மாறும்படி கட்டாயப் படுத்தினார்கள். மதம் மாற விருப்பம் இல்லாதவர்கள் அங்கிருந்து பாலக்காட்டுக்கு குடி பெயர்ந்தனர். அவ்வாறு குடி பெயர்ந்தவர்களில் எம்.ஜி.ஆரின் மூதாதையர்களும் அடங்குவர். எனவே எனது வேண்டுகோள் தமிழையும், தமிழரையும் நேசிப்பவர்கள் யாரும் திப்பு சுல்தான் வேடத்தில் நடிக்க கூடாது. அந்த படத்தை தமிழகத்தில் திரையிட அனுமதிக்க மாட்டோம் என அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. நாம் வாழும் காலத்தில், மும்பையில் தமிழர்களை அடித்துத் துரத்திய சிவசேனாவையும், பால்தாக்கரேயையும் விமர்சிக்க இந்து முன்னணி அமைப்பாளருக்கு அன்று வாயோ, வார்த்தைகளோ இருக்கவில்லை.

@G4ceTech

Kapga Second History Tamil Part 3 ஆதம் (அலை) அவர்களால் கட்டப்பட்ட 'கஅபா' நாளடைவில் பாழடைந்து செடி, கொடிகள் சூழப்பட்டதாக மாறியது. இஸ்மாயீல் (அலை) அவர்கள் வாலிபப் பருவத்தை அடையும் பொழுது தான் அல்லாஹ் கஅபாவைப் புணர் நிர்மாணம் செய்யுமாறு கட்டளையிடுகிறான். எங்கள் இறைவா! எனது சந்ததிகளை உனது புனித ஆலயத்திற்கருகில், விவசாயத்துக்குத் தகுதி இல்லாத பள்ளத்தாக்கில், இவர்கள் தொழுகையை நிறை வேற்றுவதற்காகக் குடியமர்த்தி விட்டேன். (அல்குர்ஆன் 14:37) என இப்ராஹீம் (அலை) அவர்கள் கூறினார்கள். ஹாஜரா, கைக்குழந்தை இஸ்மாயீலையும் பாலைவனத்தில் விட்டு வரும் போது நபி இப்ராஹீம் (அலை) மேற்கண்ட 'துஆ'வை கூறினார்கள் என்பது ஹதீஸின் (புகாரி 3364) மூலம் தெளிவாகிறது. எனவே சிதிலமடைந்த பள்ளிவாசலைத் தூய்மை செய்யுமாறும், அதன் அடித்தளத்தை உயர்த்துமாறும் அல்லாஹ் கட்டளையிடுகிறான்.

@G4ceTech

Kapga First History Tamil Part 2 கஃபா (முதல் இறையில்லம்) வரலாறு அகில உலகங்களையும் படைத்த அல்லாஹ், தான் ஒருவன் மட்டும் தான் கடவுள் என்பதற்கு, அவற்றை அத்தாட்சிகளாகவும் ஆக்கினான். இவை இன்றளவும் அல்லாஹ் மட்டும் தான் ஒரே கடவுள் என்பதற்கு ஆதாரமாகத் திகழ்கின்றன. அப்படிப் பட்ட அத்தாட்சிகளில் உள்ளவை தான் அவனுடைய புனிதமிக்க ஆலயமாகிய கஅபாவும் அது அமைந்துள்ள மக்கமா நகரமும் ஆகும். உலக முஸ்லிம்களுக்கு நேர்வழி காட்டுமிடமாகவும், உலக முஸ்லிம்களின் ஒருமைப்பாட்டைப் பறைசாற்றக் கூடியதாகவும் இவ்வத்தாட்சிகள் அமைந்துள்ளன. 'கஅபா' ஆலயத்திற்கும், மக்கமா நகரத்திற்கும் மற்ற ஆலயங்களை விடவும், நகரங்களை விடவும் தனித்த சிறப்புகளும், சட்டங்களும் உள்ளன. அப்படிப்பட்ட சிறப்புகளில் சிலவற்றைக் காண்போம். உலக முஸ்லிம்களின் ஒரே கிப்லா கஅபா' ஆலயம் தான் உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் தொழுகையின் போது முன்னோக்கும் திசையாக அமைந்துள்ளது. இது உலக முஸ்லிம்களின் ஒருமைப்பாட்டிற்கு ஓர் எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றது. ஒரு முஸ்லிம் எங்கிருந்தாலும் அவன் தொழுகையின் போது கஅபாவை முன்னோக்க வேண்டும்.

@G4ceTech

Kapga Second History Tamil Part 04 ''தவாஃப் செய்வோருக்காகவும், இஃதிகாஃப் இருப்போருக்காகவும், ருகூவு, ஸஜ்தா செய்வோருக்காகவும் இருவரும் எனது ஆலயத்தைத் தூய்மைப்படுத்துங்கள்!'' என்று இப்ராஹீமிடமும், இஸ்மாயீலிடமும் உறுதி மொழி வாங்கினோம். (அல்குர்ஆன் 2:125) அந்த ஆலயத்தின் அடித் தளத்தை இப்ராஹீமும், இஸ்மாயீலும் உயர்த்திய போது ''எங்கள் இறைவா! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக! நீயே செவியுறுபவன்; அறிந்தவன்'' (என்றனர்.) (அல்குர்ஆன் 2:127) மக்காவிற்குப் பல பெயர்கள் உள்ளன. அவை: 1. மக்கா, 2. பக்கா, 3. அல் பலதுல் அமீன் (அபயமளிக்கும் ஊர்), 4. உம்முல் குரா (நகரங்களின் தாய்), நபி (ஸல்) அவர்கள் மக்காவின் மீது அளப்பரிய பற்று வைத்திருந்தார்கள். அங்கேயே வாழ வேண்டும் என எண்ணினார்கள்.

@G4ceTech

Kapga Second History Tamil Part 1 நீர் எங்கிருந்து புறப்பட்டாலும் உமது முகத்தை மஸ்ஜிதுல் ஹராம் திசையில் திருப்புவீராக! எங்கே நீங்கள் இருந்தாலும் உங்கள் முகங்களை அதன் திசையிலேயே திருப்பிக் கொள்ளுங்கள்! அவர்களில் அநீதி இழைத்தோரைத் தவிர (மற்ற) மக்களுக்கு உங்களுக்கு எதிராக எந்தச் சான்றும் இருக்கக் கூடாது என்பதும், எனது அருட்கொடையை உங்களுக்கு நான் முழுமைப் படுத்துவதும், நீங்கள் நேர் வழி பெறுவதுமே இதற்குக் காரணம். (அல்குர்ஆன் 2:150) முதல் ஆலயம் மக்கள் அல்லாஹ்வை மட்டும் வணங்குவதற்காக முதலில் கட்டப்பட்ட பள்ளிவாசல் மக்காவிலுள்ள 'கஅபா' ஆலயமாகும். அகிலத்தின் நேர்வழிக்கு உரியதாகவும், பாக்கியம் பொருந்தியதாகவும் மனிதர்களுக்காக அமைக்கப்பட்ட முதல் ஆலயம் பக்கா(எனும் மக்கா)வில் உள்ளதாகும். (அல்குர்ஆன் 3:96)

@G4ceTech

Kapga First History in Tamil கஃபா (முதல் இறையில்லம்) வரலாறு 1) உலக முஸ்லிம் அனைவரும் ஷேர் செய்யுங்கள். 2) அன்புள்ள சகோதர சகோதரிகளே உங்கள் நண்பர்களுடன் ஷேர் செய்யுங்கள். 3) இந்த செய்தியை அனைவருக்கும் சேர்க்க ஷேர் செய்யுங்கள். கிஸ்வா (Kiswa) துணிப்பற்றி; காபாவின் மீது போடப்பட்டுள்ள கருப்பு நிறத்திலுள்ள துணிவிற்கு கிஸ்வா (kiswa) எனப்பெயர். இது ஒவ்வொரு ஆண்டும் புதிதாக தயாரித்து மாற்றுவார்கள். இதை மக்காவிலுள்ள கம்பேனியில் உருவாக்குவார்கள். இந்த கிஸ்வா துணியின் மதிப்பு சுமார் 17 மில்லியன் சவுதி ரியால் ஆகும். இத்துணி 670கிலோ வெள்ளி சாயம் புசப்பட்ட துணியால் ஆனது. 120கிலோ சுத்த தங்கத்தாலும், 50கிலோ வெள்ளியாலும் அத்துணியின் மீது குர்ஆன் வசனங்கள் பொரிக்கப்பட்டு இருக்கிறது. இந்த துணியின் மொத்த சுற்றளவு 658 சதுரமீட்டர்கள்.

@G4ceTech

Kapga Second History Tamil Part 2 கஅபா' ஆலயத்தை முதன் முதலில் கட்டியவர்கள் நபி ஆதம் (அலை) அவர்களாவார்கள். அதைப் புனர் நிர்மாணம் செய்தவர்கள் நபி இப்ராஹீம் (அலை) ஆவார்கள். ஆதம் (அலை) அவர்கள் முதலில் கஅபாவைக் கட்டி, 40 வருடங்களுக்குப் பிறகு பாலஸ்தீனத்தில் உள்ள ''மஸ்ஜிதுல் அக்ஸா''வைக் கட்டினார்கள். இதற்குப் பின்வரும் செய்தி சான்றாக உள்ளது. நான் நபி (ஸல்) அவர்களிடம் ''பூமியில் முதலில் அமைக்கப்பட்ட பள்ளி எது?'' எனக் கேட்டேன். அதற்கு அவர்கள், 'அல் மஸ்ஜிதுல் ஹராம்' (கஅபா) என்று கூறினார்கள். பிறகு எது? என்றேன். 'அல் மஸ்ஜிதுல் அக்ஸா' என்று கூறினார்கள். ''இந்த இரண்டிற்கும் மத்தியில் எத்தனை (வருடங்கள் இடைவெளி?)'' என்று கேட்டேன். ''நாற்பது வருடங்கள்'' என்று கூறினார்கள்.அபூதர் (ரலி) புகாரி 3366

@G4ceTech

Way to Paradise Tamil அந்த (மறுமை) நாளில் சில முகங்கள் (மகிழ்ச்சியினால் பிரகாசமாய்) வெண்மையாகவும், சில முகங்கள் (துக்கத்தால்) கருத்தும் இருக்கும்; கருத்த முகங்களுடையோரைப் பார்த்து: நீங்கள் ஈமான் கொண்டபின் (நிராகரித்து) காஃபிர்களாகி விட்டீர்களா? (அப்படியானால்,) நீங்கள் நிராகரித்ததற்காக வேதனையைச் சுவையுங்கள்” (என்று கூறப்படும்). எவர் அல்லாஹ்வின் பக்கம் (மக்களை) அழைத்து, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து: “நிச்சயமாக நான் (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபட்ட) முஸ்லிம்களில் நின்றும் உள்ளவன் என்று கூறுகின்றாரோ, அவரைவிட சொல்லால் அழகியவர் யார்?” (இருக்கின்றார்?)

@G4ceTech

Thippu Sultan Vs Rajini Tamil novel சாதியின் பெயரால் தினந்தோறும் தலித்துகள் தாக்கப்படுகிறார்கள், கொலை செய்யப்படுகிறார்கள். அந்த இந்துக்களுக்காக பேச இந்து முன்னணிக்கு நாவில்லை ஆனால், சரித்திரத்தை திரித்து இவர்கள் கூறும் புரட்டு கதைகளை நம்பி, திப்புசுல்தான் படத்தில் ரஜினி நடிக்கக் கூடாது. நடித்தால் அது தமிழையும், தமிழரையும் அவமதிக்கும் செயல் (ரஜினி இந்தப் படத்தில் இந்து முன்னணி சொன்னாலும் சொல்லாவிட்டாலும் நடிக்கப் போவதில்லை என்பது வேறு விஷயம்). நிகழ்காலத்தில் நடக்கும் சமூக கொடுமைகளுக்கு கள்ள மவுனம் இருந்துவிட்டு, இறந்தகாலத்தை தோண்டியெடுத்து மதவெறி அரசியல் செய்யப் பார்க்கிறது இந்து முன்னணி. இந்த தேசவிரோத செயலை கண்டிப்பதும், புறக்கணிப்பதும் ஒவ்வொருவரின் கடமையாகும்.

@G4ceTech

Thippu Sulthan solraru Rajini nadikka koodathi Tamil சந்தர்ப்பங்களை உருவாக்கியேனும் மதவெறியை முன்வைக்கும் அமைப்பு இந்து முன்னணி. திப்புசுல்தானாக ரஜினி நடிக்க வேண்டும் என்று கன்னடப்பட தயாரிப்பாளர் அசோக் கெனி விடுத்த அழைப்பு, வெறும் வாயை மென்று கொண்டிருந்த இந்து முன்னணிக்கு கிடைத்த அவல். திப்புசுல்தானை இந்து விரோதியாக்கி மதவெறியை மென்று துப்பியிருக்கிறது, இந்து முன்னணியின் தலைமை. இந்து முன்னணியின் அமைப்பாளர் ராம.கோபாலன் இது குறித்து துவேஷ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். “திப்புசுல்தான் வேடத்தில் தமிழ் நடிகர்கள் நடிப்பது தமிழர்களை அவமானப்படுத்துவதற்கு சமம். திப்பு சுல்தான் தமிழர்களுக்கும் குறிப்பாக இந்துக்களுக்கு எதிராக நடத்திய தாக்குதல்கள் பற்றி பல வரலாற்று புத்தகங்களில் இருந்து அடையாளம் காட்ட முடியும்.

@G4ceTech

Half-Drunker - A little addictive drunken Story ஒரு ஊரில் மொடாக் குடிகாரன் என்று தன்னைத் தானே நினைத்துக் கொண்டிருந்த குடிமகன் ஒருவன் இருந்தானாம். எப்போதும் சரக்கடித்த பிறகே புரோட்டாவும் சால்னாவும் சாப்டுவது அவன் வழக்கம். ஓரளவு தம் அடிக்கும் பழக்கம் உள்ளவன். ஒரு கோர்ட்டரோ ஆஃபோ வாங்கிக் குடுத்துவிட்டு வழி கேட்டால் உடனே பட்டை சாராயம் காய்ச்சும் இடத்தை கூட காட்டிவிடுவானாம்.. ஒருநாள் 12 வயது மதிக்கத் தக்க சிறுவன் நடந்து வந்தவன் இந்த குடிகாரன் வீட்டின் முன் கஞ்சா கிடைக்காத கடுப்பில் வந்து உட்கார்ந்துவிட்டானாம்.. உடனடியாக பதறிய அந்த குடிகாரன், அவனை வீட்டிற்குள் அழைத்து வந்து அவன் முன் ஒரு சரக்கு பாட்டிலைக் காட்டி, "கோவியானந்தரே, இந்த சிறுவனுக்கு போதை ஏற்றி வைக்க எனக்கு நல்ல உள்ளம் கொடுத்ததற்கு நன்றி, சிறுவனே பார், ஓல்ட் மங்க் இருக்கிறது, இல்லை என்றால் நீ என்வீட்டு வாசலில் விழுந்து இருக்கமாட்டாய், உடனடியாக உனக்கு ஓல்ட் மங்கும் கிடைத்திருக்காது" என்றானாம் இதைக் கேட்ட சிருவன் திடுக்கிட்டான், காரணம் அவர் ஒரு கஞ்சா குடுக்கி. "தலைவா நான் ஒரு கஞ்சா குடுக்கி, நீங்கள் ஒரு கொடாக் குடிகாரனாக இருந்தாலும் எனக்கு கஞ்சா தருவதாக இருந்தால் ஏற்றுக் கொள்கிறேன், நான் உங்கள் சரக்குக்கு எதிரானவன், எனக்கு குடிப்பழக்கம் கிடையாது" என்றாராம் இதைக் கேட்டதும் அருவெறுப்பு பட்ட மொடாக் குடிகாரன், மேலே கைக்கூப்பி "நான் ஒரு கஞ்சா குடுக்கிக்கா உதவ இருந்தேன். நல்லவேளை பகவானே, சரக்கை நிந்திப்பவருக்கு ஓல்ட் மங்க் அளித்து பாவம் செய்ய இருந்தேன்...என்னை மன்னியுங்கள்" என்று கூறிவிட்டு, அந்த சிறுவனை நோக்கி, கண்ணை மூடிக் கொண்டே... மேலும் கோபம் அடைந்தவனாக "உன்னைப் போன்ற குடிப்பழக்கத்திற்கு எதிரான பார்ட்டிகளுக்கு நான் உதவி செய்வது கிடையாது, உனக்கு உதவி செய்தால் எந்த ஜென்மத்திலும் எனக்கு சரக்குக் கிடைக்காது...இங்கிருந்து சென்றுவிடு மூடனே...." என்று சத்தம் போட சிறுவன் வசைகளால் குறுக்கிப் போய்......மெளனமாக வெளி ஏறிவிட்டானாம். இன்னும் கோவம் தீராத, அந்த மொடாக் குடிகாரன் புலம்ப ஆரம்பித்து "கோவியானந்தரே, இது என்ன சோதனை, ஒரு கஞ்சா பார்ட்டிக்கு உதவி அளித்து ஜெயிலுக்குப் போக இருந்தேனே......உங்களுக்கு நான் என்ன குறைவைத்தேன்.." என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது, வீடெல்லாம் சரக்கு வெள்ளம். அந்த குடிகாரனுக்கு முன்னால் குடிபகவான் ஜானி வாக்கர் தோன்றி, "முட்டாளே ! தினமும் கஞ்சா அடித்தாலும் அந்த சிறுவனுக்கு 7 வயது முதலே எவர் மூலமாவது தொடந்து கஞ்சா அளித்தேன், ஒரே ஒரு நாள் உன் வீட்டு வாசல் வழியாக சென்ற போது கஞ்சா கிடைககாத கடுப்பில் வந்து உட்கார்ந்த காரணத்தினால் சிறுவனை திட்டி விட்டாயே, சிறுவனுக்கான இன்றைய கஞ்சா உன்னால் கிடைத்துவிடும் என்று உன்னை நம்பி இருந்தேனே, இப்போது நானே பாவம் செய்துவிட்டேன் " என்றாராம். பேச்சே எழாமல் தன் தவறை உணர்ந்த குடிகாரன் கண் முன்னே நிற்கும் ஜானி வாக்கரைப் பார்க்கக் கூட வெட்கப்பட்டு, கூசிப் போக வைத்த தன் செயலை நினைத்து தலைகுணிந்தானாம். குறிப்பு: இந்த கதை கோவியானந்தா அவர்களின் டைரியில் படித்தது,பதிவுரையில் சிறிது மாற்றி இருக்கிறேன். பொய்முகங்கள் கொண்டு தான் ஒரு மொடாக் குடிகாரன், என்கிற நினைப்பில் கஞ்சா அடிப்பவர்களை தூற்றுவோர்க்கு அர்ப்பணமாக்குகிறேன். அடிக்க சரக்கும், தொட்டுக்க ஊறுகாயும், பக்கத்தில் டாஸ்மாக்கும், ஏசி பார் / டாஸ்மாக் பார் என்ற நிலை இல்லாதிருந்தால் எந்த வயதிலும் சரக்கடிக்கலாம். கோவியானந்தா புகழ்பாடலாம், இப்படி இருப்பவன் தானே குடிகாரன்? இது இந்தப் பதிவின் கதைக்கு எதிரானது அல்ல

@G4ceTech

Green peas Masala Tamil Cooking பச்சைப்பட்டாணி - 250 கிராம் (அல்லது) காய்ந்த பட்டாணி - 150 கிராம் பெரிய வெங்காயம் - 2 தக்காளி - 2 அல்லது 3 உருளைக்கிழங்கு - ஒன்று சீரகம் - அரை தேக்கரண்டி ஏலக்காய் - ஒன்று கிராம்பு - 2 இஞ்சி விழுது - ஒரு தேக்கரண்டி சிவப்பு மிளகாய்த்தூள் - 1 அல்லது 1.5 தேக்கரண்டி கரம் மசாலாத்தூள் - ஒரு தேக்கரண்டி எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி பச்சை கொத்தமல்லித்தழை - 2 மேசைக்கரண்டி (பொடியாக நறுக்கியது) உப்பு - சுவைக்கேற்ப தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்து கொள்ளவும். உருளைக்கிழங்கை சிறு சதுரங்களாக நறுக்கி தனியே வைத்துக் கொள்ளவும். பெரிய வெங்காயம், தக்காளியை சிறு சதுரங்களாக நறுக்கி மிக்ஸியில் நறுக்கின வெங்காயம், தக்காளி, ஏலக்காய், கிராம்பு எல்லாவற்றையும் சேர்த்து நன்கு அரைத்து வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகத்தைப் போட்டு வெடிக்க விடவும். அதில் அரைத்து வைத்துள்ள தக்காளி, வெங்காயம் விழுதை ஊற்றவும். பின்னர் இஞ்சி விழுது சேர்க்கவும். தீயை மெதுவாக வைத்து கிளறி விடவும். சிறிது கொதித்ததும் **பட்டாணி** மற்றும் நறுக்கின உருளைக்கிழங்கு சேர்க்கவும். பின்னர் சிவப்பு மிளகாய்த்தூள், கரம் மசாலா சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும். குக்கரை மூடி, வெயிட் போட்டு 2 அல்லது 3 விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும். குக்கர் சூடு தணிந்ததும் திறந்து தேவையான அளவு உப்பு சேர்க்கவும். பரிமாறும் பாத்திரத்தில் மாற்றவும். பொடியாக நறுக்கின கொத்தமல்லியை மேலே தூவி அலங்கரிக்கவும். சப்பாத்தி, பூரி, நாண் போன்ற வகைகளுக்கு சூப்பர் சைடு டிஷ்.

@G4ceTech

Husband and Wife Part - 2 அவங்க handphone நம்பர் இருக்கு, ஆனா நான் அழைச்சா இனி பேச மாட்டாங்க, whatsupp பண்ணா படிக்க மாட்டாங்க... முன்னே என் படுக்கையிலே ஒரு பக்கம் நானும் மறுபக்கம் அவங்களும் படுத்திருப்போம்... இப்ப நான் அதே படுக்கையிலே நடுவில தனியா படுத்திருக்கேன்... சமையலறைக்குத் தனியா போறேன், சமையலுன்னு பேர்ல எதையோ பண்றேன், வாய்க்கு ருசியா சமைச்சு பகிரஅவங்க இல்லை... கோயிலுக்கு இப்ப ஒன்னா போக அவங்க இல்லை... விழியோரம் நீர் தேங்க, அதான் மகளே, அவங்க இருக்கும்போதே அவங்களை அதிகமாக நேசிக்கணும், அதிகமாக போற்றணும். கணவனின் வெற்றியோ தோல்வியோ, பெருமையோ அவமானமோ மனைவிக்கு அனைத்திலும் சம பங்கு உண்டு. தன் மனைவி தன் உடன் தோளோடு தோள் கொடுத்து நிற்காத எந்த கணவனுக்கும் ஏற்படும் அவமானம் தலை குனிவு வேறெந்த அவமானத்தை விட அவனை அதிகம் காயப்படுத்தும். வேதனை படுத்தும். எங்கு போனாலும் என் கணவர் முன்னே சென்று எனக்கு இடம் பிடித்து தருவார்.. பஸ் இல் ஏறும் போது ,விழாக்களில் விருந்துகளில் எனக்கு முன்பே ஓடி சென்று எனக்கு இடம் பிடித்து இல்லாவிட்டால் ஏதாவது எனக்கு வசதியாக ஏற்பாடு பண்ணி தருவார். பிரயாணம் செய்யும் போது நான் அசந்து தூங்கி விடுவேன். அவரோ ஒரு நிமிடம் கூட கண் அசர மாட்டார். பல முறை 8 மணி நேரம் 12 மணி நேரம் அவசர பயணத்தின் போது பஸ்ஸில் இடம் கிடைக்காமல் என்னை மட்டும் உட்கார வைத்து பாதுகாப்பிற்காக பக்கத்திலேயே கம்பியை பிடித்து நின்று வந்திருக்கிறார். இன்னிக்குத் தினமும் என் கணவனின் கல்லறைக்குப் போறேன். எனக்காக எல்லாத்தையும் தயார் பண்ண நீ முன்னுக்கே போயிட்டியாப்பா? இதோ நான் பின்னாலேயே வந்துகிட்டு இருக்கேன்னு சொல்வேன். சரி மகளே, நான் வரேன் என்று புறப்பட்ட முதியவளை வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்தாள் அந்த இளம் நவ உலக சமத்துவ மனைவி். என்ன நினைத்தாளோ மண்டப திற்கு உள் சென்று தன் கணவனை தேட ஆரம்பித்தாள். ஆம், நம் மனைவிதானே எப்படி நடந்தாலும் பரவாவில்லை என கணவனும், நம் கணவன் தானே எப்படி பேசினாலும் பரவாவில்லை என மனைவியும் எண்ணக்கூடாது. புதிதாக அறிமுகமாகும் ஒருவரிடமே, hi sir how r u? Nice to meet u என்கிறோம். இடையில் இரும்புகிறோம், தும்புகிறோம் I'm sorry sir என்கிறோம். பேச்சுக்கிடையில் ஒரு தொலைப்பேசி அழைப்பு வருகிறது, உடனே excuse me sir சொல்றோம். அந்த நபரைச் சந்தித்தே 10-20 நிமிடம்தான் ஆகியிருக்கும். அதன்பின் அவரைச் சந்திப்போமா என்றே தெரியாது. ஆனாலும் எவ்வளவு மரியாதை தருகிறோம்? *வாழ்நாள் முழுதும் நம்மோடு வாழ்கிற* கணவனை மனைவி மதிக்கிறாளா? இல்லை பதில் 100 க்கு 95சதவீதம், இல்லைதான். கணவனின் கரிசனையை, திறமைகளை **பாராட்டுறதுமில்லை**,* அசதியாக வேலை முடிந்து வீடு திரும்பும் கணவன்கிட்ட, ஏங்க, ரொம்ப வேலையா, காலையிலேர்ந்து நான் *உங்களை ரொம்ப மிஸ் பண்ணேங்கனு* மனைவியும் சொல்றதில்லை. இதெல்லாம் சொல்லணும். அப்படி *ஒருத்தர் உணர்வை இன்னொருத்தர் புரிஞ்சிகிட்டு வாழ ஆரம்பிச்சா வாழ்க்கை இனிக்கும்.* நல்ல பதிவு🙏🏻 Please give your support for us

@G4ceTech

Husband and Wife Part - 1 ஒரு திருமண மண்டப வாசலில் ஒரு இளம் தம்பதிக்குள் சின்ன வாக்குவாதம். கணவனை உ|ள்ளே அனுப்பிவிட்டு, வாசலில் போடப்பட்ட நாற்காலியில் அமர்ந்த அந்த நவ உலக மனனவியை கவனித்த 60 வயது மதிக்கத்தக்க முதியவள் ஒருவர், மனைவியை அணுகி," மகளே! நான் கேட்பதைத் தவறாக எண்ணிக் கொள்ளாதீர், ஏன் உன் கணவனைகடிந்து கொண்டீர்கள் என தெரிந்து கொள்ளலாமா?" எனக் கேட்டார். "ஒன்னுமில்லை ஆண்டி, சும்மாதான். இது  என் கணவரது தங்கையின் திருமணம். நானும்கூட வந்து  நிற்கணுமாம், எல்லா நிகழ்ச்சியிலும் பங்கெடுக்கணுமாம். வீட்டுக்கு ஒரே பையன் என்றாலும் இவரை இவர் வீட்டாரே மதிப்பதில்லை. இதிலே என்னைய வேறு கூப்பிடுகிறார். பெண் என்றால் அடிமையா என்ன? கணவன் செல்லும் இடமெல்லாம் செல்வதற்கு ? எனக்கே அசதியா இருக்கு. இந்த ஆம்பளைங்கன இப்படிதான் ஆண்டி தன்மானம் இல்லாதவர்கள்். சும்மா கடுப்பேத்திகிட்டு".  முதியவள் சிறு புன்னகையோடு, " மகளே முன்பெல்லாம் நான் எங்கே போனாலும் என் கணவனோடுதான் போவேன். ்.ஆனா இப்ப அவங்க இறந்து 8 மாசமாச்சி. எங்க ரெண்டு பேருக்கும் ஏறக்குறைய ஒரே வயசு. ரெண்டு பேருமே ஆசிரியர்கள். பணி ஓய்வுக்குப் பிறகு ஒன்னாவே ஊர்லே எல்லா புண்ணியஸ்தலத்துக்கும் போனோம். எங்களோட 3 பிள்ளைங்களும், கல்யாணம் பண்ணி தனித்தனியா இருக்கிறதாலே, நாங்க தனியா எங்க வீட்லே இருந்தோம். என் கணவனுக்கு துர்திஷ்டவசமா   இனிப்புநீர், ரத்தக்கொதிப்புனு நோய்கள் இருந்திச்சி. தினமும் மருந்து சாப்பிடணும். அவங்க அவ்வளவு திடகாத்திரமா இல்லாததாலே நான் தான் அவங்களை முழுமையா கவனிச்சிகிட்டேன். இப்ப அவங்க இல்லை, *நான் ரொம்ப தனிமையாக உணர்கிறேன்.* என் பகல்கள் ரொம்ப நீளமாயிச்சு, இரவுகள் ரொம்பவும் வெறுமையாச்சு. அவங்களோட ஒவ்வொரு பொருளும் அவங்களை எனக்கு நினைவுபடுத்திகிட்டே இருக்கு. அவங்க சாப்பிட்டு முடிக்காத அந்த மருந்துங்கக் கூட என்னைக் கவலைப்படுத்துது.

@G4ceTech

Running Diary 1 இது எனது முதல் பதிவு read.cash வீட்டிலிருந்து கிழக்கு கடற்கரை பூங்கா வரை வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் முதலில் உணர்ந்தது வெய்யிலைத் தான். கடுமையான வெயில். ஓட ஆரம்பித்தவுடன் ஞாபகத்தில் வந்தது டிராட்ஸ்கி மருது அவர்களின் பேட்டிதான். அருமையான ஒன்று. சென்ற வாரம் என் மகளுக்கு லியோனார்டோ டாவின்சியை அறிமுகப் படுத்தினேன். அவளுக்கு அவரது கதை பிடித்து விட்டது. இந்த வாரம் அவரின் ஓவியங்களை அவளுக்கு காட்ட வேண்டும் என்று எண்ணிக் கொண்டே கிழக்கு கடற்கரை பூங்காவை அடைந்தேன். பூங்கா ஓடுபவர்களால் நிறைந்திருந்தது.  கரையில் "otters" விளையாடிக் கொண்டிருந்தன. சற்று நேரம் நின்று அவற்றை ரசித்தேன். மீண்டும் வீட்டுக்கு  திரும்பி ஓட ஆரம்பித்தேன். ஏனோ மனதில் பீத்தோவனின் ஐந்தாம் சிம்பொனி ஓட ஆரம்பித்தது. மீண்டும் மீண்டும் வந்து கொண்டே இருந்தது.  ரசித்துக் கொண்டே வீட்டை அடைந்தேன்.