Husband and Wife Part - 1
ஒரு திருமண மண்டப வாசலில் ஒரு இளம் தம்பதிக்குள் சின்ன வாக்குவாதம். கணவனை உ|ள்ளே அனுப்பிவிட்டு, வாசலில் போடப்பட்ட நாற்காலியில் அமர்ந்த அந்த நவ உலக மனனவியை கவனித்த 60 வயது மதிக்கத்தக்க முதியவள் ஒருவர், மனைவியை அணுகி," மகளே! நான் கேட்பதைத் தவறாக எண்ணிக் கொள்ளாதீர், ஏன் உன் கணவனைகடிந்து கொண்டீர்கள் என தெரிந்து கொள்ளலாமா?" எனக் கேட்டார். "ஒன்னுமில்லை ஆண்டி, சும்மாதான். இது என் கணவரது தங்கையின் திருமணம். நானும்கூட வந்து நிற்கணுமாம், எல்லா நிகழ்ச்சியிலும் பங்கெடுக்கணுமாம். வீட்டுக்கு ஒரே பையன் என்றாலும் இவரை இவர் வீட்டாரே மதிப்பதில்லை. இதிலே என்னைய வேறு கூப்பிடுகிறார். பெண் என்றால் அடிமையா என்ன? கணவன் செல்லும் இடமெல்லாம் செல்வதற்கு ? எனக்கே அசதியா இருக்கு. இந்த ஆம்பளைங்கன இப்படிதான் ஆண்டி தன்மானம் இல்லாதவர்கள்். சும்மா கடுப்பேத்திகிட்டு". முதியவள் சிறு புன்னகையோடு, " மகளே முன்பெல்லாம் நான் எங்கே போனாலும் என் கணவனோடுதான் போவேன். ்.ஆனா இப்ப அவங்க இறந்து 8 மாசமாச்சி. எங்க ரெண்டு பேருக்கும் ஏறக்குறைய ஒரே வயசு. ரெண்டு பேருமே ஆசிரியர்கள். பணி ஓய்வுக்குப் பிறகு ஒன்னாவே ஊர்லே எல்லா புண்ணியஸ்தலத்துக்கும் போனோம். எங்களோட 3 பிள்ளைங்களும், கல்யாணம் பண்ணி தனித்தனியா இருக்கிறதாலே, நாங்க தனியா எங்க வீட்லே இருந்தோம். என் கணவனுக்கு துர்திஷ்டவசமா இனிப்புநீர், ரத்தக்கொதிப்புனு நோய்கள் இருந்திச்சி. தினமும் மருந்து சாப்பிடணும். அவங்க அவ்வளவு திடகாத்திரமா இல்லாததாலே நான் தான் அவங்களை முழுமையா கவனிச்சிகிட்டேன். இப்ப அவங்க இல்லை, *நான் ரொம்ப தனிமையாக உணர்கிறேன்.* என் பகல்கள் ரொம்ப நீளமாயிச்சு, இரவுகள் ரொம்பவும் வெறுமையாச்சு. அவங்களோட ஒவ்வொரு பொருளும் அவங்களை எனக்கு நினைவுபடுத்திகிட்டே இருக்கு. அவங்க சாப்பிட்டு முடிக்காத அந்த மருந்துங்கக் கூட என்னைக் கவலைப்படுத்துது.
No comments yet