read.cash Log in
@G4ceTech

Husband and Wife Part - 2

அவங்க handphone நம்பர் இருக்கு, ஆனா நான் அழைச்சா இனி பேச மாட்டாங்க, whatsupp பண்ணா படிக்க மாட்டாங்க... முன்னே என் படுக்கையிலே ஒரு பக்கம் நானும் மறுபக்கம் அவங்களும் படுத்திருப்போம்... இப்ப நான் அதே படுக்கையிலே நடுவில தனியா படுத்திருக்கேன்... சமையலறைக்குத் தனியா போறேன், சமையலுன்னு பேர்ல எதையோ பண்றேன், வாய்க்கு ருசியா சமைச்சு பகிரஅவங்க இல்லை... கோயிலுக்கு இப்ப ஒன்னா போக அவங்க இல்லை... விழியோரம் நீர் தேங்க, அதான் மகளே, அவங்க இருக்கும்போதே அவங்களை அதிகமாக நேசிக்கணும், அதிகமாக போற்றணும். கணவனின் வெற்றியோ தோல்வியோ, பெருமையோ அவமானமோ மனைவிக்கு அனைத்திலும் சம பங்கு உண்டு. தன் மனைவி தன் உடன் தோளோடு தோள் கொடுத்து நிற்காத எந்த கணவனுக்கும் ஏற்படும் அவமானம் தலை குனிவு வேறெந்த அவமானத்தை விட அவனை அதிகம் காயப்படுத்தும். வேதனை படுத்தும். எங்கு போனாலும் என் கணவர் முன்னே சென்று எனக்கு இடம் பிடித்து தருவார்.. பஸ் இல் ஏறும் போது ,விழாக்களில் விருந்துகளில் எனக்கு முன்பே ஓடி சென்று எனக்கு இடம் பிடித்து இல்லாவிட்டால் ஏதாவது எனக்கு வசதியாக ஏற்பாடு பண்ணி தருவார். பிரயாணம் செய்யும் போது நான் அசந்து தூங்கி விடுவேன். அவரோ ஒரு நிமிடம் கூட கண் அசர மாட்டார். பல முறை 8 மணி நேரம் 12 மணி நேரம் அவசர பயணத்தின் போது பஸ்ஸில் இடம் கிடைக்காமல் என்னை மட்டும் உட்கார வைத்து பாதுகாப்பிற்காக பக்கத்திலேயே கம்பியை பிடித்து நின்று வந்திருக்கிறார். இன்னிக்குத் தினமும் என் கணவனின் கல்லறைக்குப் போறேன். எனக்காக எல்லாத்தையும் தயார் பண்ண நீ முன்னுக்கே போயிட்டியாப்பா? இதோ நான் பின்னாலேயே வந்துகிட்டு இருக்கேன்னு சொல்வேன். சரி மகளே, நான் வரேன் என்று புறப்பட்ட முதியவளை வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்தாள் அந்த இளம் நவ உலக சமத்துவ மனைவி். என்ன நினைத்தாளோ மண்டப திற்கு உள் சென்று தன் கணவனை தேட ஆரம்பித்தாள். ஆம், நம் மனைவிதானே எப்படி நடந்தாலும் பரவாவில்லை என கணவனும், நம் கணவன் தானே எப்படி பேசினாலும் பரவாவில்லை என மனைவியும் எண்ணக்கூடாது. புதிதாக அறிமுகமாகும் ஒருவரிடமே, hi sir how r u? Nice to meet u என்கிறோம். இடையில் இரும்புகிறோம், தும்புகிறோம் I'm sorry sir என்கிறோம். பேச்சுக்கிடையில் ஒரு தொலைப்பேசி அழைப்பு வருகிறது, உடனே excuse me sir சொல்றோம். அந்த நபரைச் சந்தித்தே 10-20 நிமிடம்தான் ஆகியிருக்கும். அதன்பின் அவரைச் சந்திப்போமா என்றே தெரியாது. ஆனாலும் எவ்வளவு மரியாதை தருகிறோம்? *வாழ்நாள் முழுதும் நம்மோடு வாழ்கிற* கணவனை மனைவி மதிக்கிறாளா? இல்லை பதில் 100 க்கு 95சதவீதம், இல்லைதான். கணவனின் கரிசனையை, திறமைகளை **பாராட்டுறதுமில்லை**,* அசதியாக வேலை முடிந்து வீடு திரும்பும் கணவன்கிட்ட, ஏங்க, ரொம்ப வேலையா, காலையிலேர்ந்து நான் *உங்களை ரொம்ப மிஸ் பண்ணேங்கனு* மனைவியும் சொல்றதில்லை. இதெல்லாம் சொல்லணும். அப்படி *ஒருத்தர் உணர்வை இன்னொருத்தர் புரிஞ்சிகிட்டு வாழ ஆரம்பிச்சா வாழ்க்கை இனிக்கும்.* நல்ல பதிவு🙏🏻 Please give your support for us

No comments yet

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.