read.cash Log in

@ChemRaj

Joined 8 May 2020 · 101 posts

I am a Blogger and Part time Story Teller and Writter

120 KT

0 KT · $4.75 received · 0 KT · $2.60 given

Posts

@ChemRaj

Sakthi Dharunam Jothi Tamil Novel சக்திஜோதி தருணம் கிளர்ந்தெழும் நினைவுகளின்சுழலில் சுழல்கிறது மனம் நதியில் நீந்தும் மீன்களைப்போல நினைவுகளில் பயணிக்கிறதுஒரு சொல் அருகாமை நறுமணம் உணவுப் பொருட்கள் உடைகளின் வண்ணங்கள் என ஏதாவது ஒன்றிலிருந்து ஊற்றுப்போல நினைவுகள் உருக்கொள்கிறது. குளத்துத் தாமரைக் கொடிகளில் சிக்கி மிதப்பதுபோலவும் சுழித்து ஓடும் நீரில்வந்தடையும் சிறுதுரும்பெனவும் நினைவுகளில் தடுமாறி நிற்கிறது சில தருணங்கள் தாமரை இலைகளில் உருளும் நீர்த்துளிகளென அத்தருணங்கள் மாறிமாறி வெவ்வேறு காலவெளிகளில் ஓடுகிறது முழுதாய் விடுபடத் துடிக்கிறது உன் நினைவு தாமரை இலைமேல்படர்கிறது ஒரு பூவைப் பறித்துக் கொண்டு திரும்புகிறேன் கூடவே நதிக்கரையில் காத்திருந்த தருணத்தையும்.

@ChemRaj

Vimmalathitha Mamallan Nice Novel **விமலாதித்த மாமல்லன்** முடிச்சு முடிச்சிலிருந்து விடுபடவேண்டும். முடிந்தால் இந்த முடிச்சை அவிழ்க்க உதவுங்கள். முடிச்சு, ஏன் முதலில் விழுந்தது என்றோ அல்லது ஏன் போட்டுக்கொண்டாய் என்றோ காலாட்டியபடி வக்கணை பேசாதீர்கள். நாளுக்குநாள் முடிச்சு இறுக்கிக் கொண்டிருக்கும் மரணாவஸ்தையின் வலியையும் கொஞ்சம் பரிசீலியுங்கள். ஒரு முனையைப் பிடித்து இழுத்தால் எளிதில் அவிழ்ந்துவிடக்கூடிய சுளுக்குமுடிச்சுகளைப் போடவே பயிற்சியளிக்கப்பட்டிருந்தது. அதைத்தான் பயின்று தேர்ந்ததாய் கர்வித்துப் போட்டுப்பார்க்கப்போனது. போடச் சொல்லிக்கொடுத்தவர் போட்டுக் காண்பிக்கையில் சுலபமாய்த் தெரிந்தது, போடும்போது எப்படி இவ்வளவு சிடுக்காகிக் கழுத்தை நெரிக்கிறது? விடைகளை வைத்துக் கொண்டு கேள்விகளைத் தயாரிக்கும் பயிற்சிக்கூடம்போல் ஆசுவாசமானதல்ல, மிருகவாடைவீசும் பாதையற்ற கானகத்தில் தப்பிக்க வழிதேடி தத்தளித்து அலையும் வாழ்க்கை.

@ChemRaj

Recently Read Beautiful Poem Tamil கோடைமழைக்குப் பிந்திய இந்த அதிகாலையில் வாகை மரத்தினடியில் நிற்கிறேன் இந்த வாகை மரம்தான் எத்தனை பெரியது எத்தனை எத்தனை பூக்கள் இளமஞ்சளாய் மலர்ந்திருக்கின்றன என்றபோதும் வாகை மரம் புறக்கணிக்கப்பட்ட மரங்களில் ஒன்று நானும் வாகையும் இவ்விதத்தில் ஒன்றுதான் ஓர் இனத்தின் முன்னே பெண்ணாக விருட்சங்களின் நடுவே வாகையாக புறக்கணிப்பின் வேதனையை அறிந்தவர்களாக வேர்கள் நிலத்திலும் கிளைகள் ஆகாயத்திலுமாய் வியாபித்திருக்கிறோம் வெற்றியை அறிந்திடச் செய்பவர்கள்தான் நாங்கள் வாகையும் நானும் ஒருபோதும் நிழலுக்காகவோ பூக்களுக்காகவோ வளர்க்கப்படவில்லை என்றறியும் ஒருவன் வாகை மலரைச் சூடிக்கொள்ளும் இரவில் நிராகரிப்பின் வலி மறந்து பெருமையடைவேன்.

@ChemRaj

Kalmel Nadantha kalam Thiyedar Bhaskaran தியடோர் பாஸ்கரன் அவர்களின் அனைத்து புத்தகங்களையும் படிக்க வேண்டுமென்ற ஆசை.அதனால் இந்த புத்தகத்தையும் நூலகத்தில் இருந்து எடுத்தேன்.இது அவரது வரலாறு சார்ந்த கட்டுரைகளைக் கொண்ட புத்தகம். இதில் அவர் எழுதியுள்ள பல விசயங்கள் எனக்கு இதற்கு முன் தெரியாது. நம் கலாச்சாரத்தையும் வரலாறையும் தெரியாதது எவ்வளவு மோசமான விசயம். ஏனோ பாடப்புத்தகத்தில் படித்த வரலாற்று நிகழ்வுகள் சாதாரணமாக தெரிந்தது ஆனால் அவற்றையே கொஞ்சம் விரிவாகவும் சுவாரசியமாக எழுதினால் வசிப்பதற்கு விருப்பம் வருகிறது. இந்த புத்தகம் அப்படிப்பட்ட புத்தகம். "தஞ்சாவூர் பெரியகோவில் கல்வெட்டுகள்" என்ற தலைப்பில் உள்ள கட்டுரை பெரியகோவிலைப் பற்றி ஒரு ஆழமான அறிமுகத்தைக் கொடுக்கிறது என்றால் மிகையாகாது. படித்தவுடன் தோன்றியது ஏன் இந்த கோவிலின் கட்டுமான பணிகளை வைத்து பெருமளவு நாவல்கள் வரவில்லை என்றுதான். இருந்தாலும் இருக்கும் ஆனால் எனக்கு இன்னும் அறிமுகமாகவில்லை."ஏழு கன்னிமார்கள்: கலையும் கதையும்" கட்டுரையில் சப்தமாதர்களின் வழிபாடு இந்தியா முழுவதும் இருந்தாலும் அவர்களுக்கு கோவில்கள் எழுப்பும் வழக்கம் தென்னிந்தியாவில் தான் உள்ளது என்கிறார். சப்தமாதர்களின் கதை மிகவும் சுவாரசியமானது. "வேட்டை நாயும் தக்கோலாப் போரும்" கட்டுரையில் வரும் ஆதகூர் நடுகல் பற்றிய குறிப்பு வியப்பை அளிக்கிறது. ஒரு பேரரசன் வேட்டை நாய் ஒன்றை போற்றி வளர்த்தும் பின்னர் அவனது தளபதி அந்த நாயை கோவில் வளாகத்திலலேயே அடக்கம் செய்தது மட்டுமால்லாமல் தினசரி பூசை செய்ய ஏற்பாடு செய்ததும் பெரும் வியப்பு. குதிரைகளும் யானைகளும் தான் பொதுவாக கல்வெட்டுகளில் இருக்கும் ஆனால் இங்கு ஒரு நாய் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது."திராவிடச் சான்று: தாமஸ் டிரவுட்மன் நேர்காணல் " இந்த புத்தகத்தில் இந்த நேர்காணல் மிக முக்கியமானது மற்றொன்று அஸ்கோ பார்ப்பொலாவின் நேர்காணல்.இரண்டும் கண்டிப்பாக வாசிக்க வேண்டியவை. இப்படி பல வரலாற்று நிகழ்வுகளை வாசிப்பதற்கு எளிமையாக எழுதியுள்ளார் தியடோர் பாஸ்கரன் அவர்கள். கண்டிப்பாக வாசிக்க வேண்டிய புத்தகம்.

@ChemRaj

Maraththan Running Diary K.Suthan ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் சிங்கப்பூர் மாரத்தான் நான் 42 கிலோ மீட்டர் ஓடவில்லை. நான் ஓடியது 21 கிலோ மீட்டர் தான். இந்த பந்தயத்தில் நான் திட்டமிட்டபடி எதுவுமே நடக்கவில்லை. 42 மற்றும் 21 கிலோ மீட்டர் ஓட்டம் ஒரே நேரத்தில் தொடங்கியது.சரியான கூட்டம். முந்தி செல்வதென்பது ஒரு போராட்டமாக இருந்தது. பதினாறு கிலோமீட்டர் வரை எதையுமே நினைக்காமல் முன்னால் ஓடியவர்கள் கால்களில் மட்டுமே கவனம் இருந்தது. ஆனால் நான் எப்போதும் ஓடும் வேகத்தில் ஓடவில்லை மிக மெதுவாகத்தான் ஓட முடிந்தது. பதினாறு கிலோமீட்டருக்கு பிறகுதான் கவனம் ஓடிக்கொண்டிருந்த பாடலில் சென்றது. ஓடிக் கொண்டிருந்தது "கண்ணே கலைமானே". என்ன கொடுமடா என்று நினைத்துக் கொண்டேன்.இருந்தாலும் பாட்டை மாற்றவில்லை. பலவிதமான மனித முகங்கள். மற்ற வீரர்களை கவனிக்க ஆரம்பித்தேன். வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவுக்கு பல்வேறு வகையான உடைகள் சூக்கள் ,சாக்ஸ் மற்றும் ஓடும் ஸ்டைல். அப்படியே அங்கும் இங்கும் பார்த்துக்கொண்டே 21 கிலோமீட்டரை ஓடி முடித்தேன். Thanks for reading

@ChemRaj

Poonachi or One White Goat Story Perumal Murugan பெருமாள்முருகனின் பத்தாவது நாவல் பூனாச்சி. தலைப்பைப் போல இது ஆடுகளின் கதை. கிழவனுக்கு ஒரு ஆட்டுக்குட்டி "பனைமரம்" உயரமுள்ள ஒருவனால் கொடுப்போதோடு கதை தொடுங்குகிறது.கிழவனும் கிழவியும் அதற்கு "பூனாச்சி" என்று பெயர் சூட்டுகின்றனர்.  இந்த நாவல் பூனாச்சியின் பார்வையில் விரிகிறது. கிழவி பூனாச்சியை மகளாக வளர்கிறாள்.பூனாச்சியும் அவர்களில் ஒருவளாக கருதுகிறாள். இக்கதையில் ஆடுகள்தான் அதிகம் பேசுகின்றன. கதை நடக்கும் இடம் அசுரலோகம்.பூனாச்சியின் பாசம் ,பயம் காதல் ,ஏக்கம் ,பிரிவு தாய்மை என்று அனைத்து உணர்ச்சிகளும் இக்கதையில் இடம்பெற்றுள்ளது. அவள் வளர வளர கிழவனும் கிழவியும் பஞ்சத்தில் அடிப்பட்டு உணவுக்கே திண்டாட்டம் வர ஆரம்பிக்கிறது. பூனாச்சி ஏழு குட்டிகள் ஈன்றாள்.ஆனால் ஒன்றைக் கூட அவளால் தன்னுடன் வைத்துக்கொள்ள முடியவில்லை. அவர்களுக்கு அதை விலைக்கு விற்க வேண்டிய சூழ்நிலை. ஏழு குட்டிகளின் பிறப்பு ஒரு பெரும் நிகழ்வாக கொண்டாடப்படுகிறது.  ***வாயிருப்பது மூடிக்கொள்ள, கையிருப்பது கும்பிடுபோட, காலிருப்பது மண்டியிட, முதுகிருப்பது குனிய, உடலிருப்பது ஒடுங்க .***  ஏழை எளியவரைத்தான் அதிகாரிகள் அதிகம் துன்புறுத்துவார்கள் என்பதை மிக அழகாக குட்டிகள் பிறந்த பிறகு நடக்கும் நிகழிச்சிகளால் எடுத்துக்காட்டியுள்ளார். அதுவும் ஊடகங்களின் நடத்தையை இதைவிட யாரும் பகடி செய்ய முடியாது.ஆடுகள் தங்களுக்கென்று ஒரு வாழ்க்கை வாழ விரும்புகிறது  ஆனால் வாழ முடியவில்லை அதேதான் மனிதர்களும் விரும்புகிறார்கள் ஆனால் அவர்களும் தாங்கள் விருப்பம்போல் வாழ முடியவில்லை. செல்வம் கொண்டுவந்த பூனாச்சி வறட்சியின் காரணத்தால் என்ன ஆனாள் என்பது தான் முடிவு. மொத்த நாவலுமே பகடி எனலாம். பலவிதமான கதாபாத்திரங்கள் பலரை நினைவு படுத்துகிறது. ஆடுகளுக்கு இணை தேடுவது ,கிழவன் கிழவியின் உரையாடல்கள் அதிகாரிகளின் உரையாடல்கள் என அனைத்தும் ஒரு விதமான பகடி . பெருமாள்முருகனின் அதே சுவாரசியமான எழுத்து வாசிப்பை எளிதாக்குகிறது. வாசிக்கலாம்.

@ChemRaj

The Great Derangement Amitav Ghose பூமி வெப்பமடைதல் பற்றிய புத்தகம். Stories ,History  மற்றும் Politics  என்று  மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.இதில் Stories மட்டும் புத்தகத்தின் பாதி. பூமி வெப்பமடைதல் பற்றி ஏன் தற்போதைய புனைவுகளில் அதிகம் வரவில்லை என்ற கேள்வி எழுப்புகிறார். பூமி வெப்பமடைதலுக்கு முக்கிய காரணம்  இயற்கையை புரிந்து கொள்ளாமல் மனிதன் நடந்து கொள்வதுதான் என்கிறார். நமக்கும் இயற்கைக்கும் இருக்கும் உறவை நாம் கண்டிப்பாக கேள்வி கேட்டுக் கொள்ளவேண்டிய சூழலில் நாம் இருக்கிறோம் என்கிறார். ஒரு பக்கம் பூமியின் வெப்பம் அதிகரிக்க ஆரம்பித்தபோது எழுத்தாளர்கள் தங்கள் எழுத்தில் படிப்படியாக இயற்கைப் பற்றிய விவரங்களைக்  குறைக்க  ஆரம்பித்தார்கள்.தெரிந்தோ தெரியாமலோ இப்படி ஆனது. ஆனால் நம் கண்முன்னால் காணுவத்தைக் கூட எழுதாதது வருத்தமளிக்கிறது என்கிறார் கோஷ். அப்படி எழுதினாலும் அதை அறிவியல் புனைவு(sci-fi ) அல்லது cli-fi பிரிவில் சேர்த்துவிடுகிறார்கள் அதனால் அதிகபேர் படிக்க முடிவதில்லை.  முதல் பகுதியில் கோஷ் பயன்படுத்தும் வார்த்தைகள் என்னமோ நான் ஏதோ சயின்ஸ் கிளாசில் இருப்பதுபோல் இருந்தது. பாதி புரிந்தும் பாதி புரியாமலும். பிறகுதான் தெரிந்தது இந்த புத்தகம் ஒரு லெச்சரை விரிவாக எழுதியது என்று History பகுதியில் பூமியின் இன்றைய நிலைமைக்கு முக்கிய  காரணம் முதலாளித்துவம் அல்ல மாறாக பேரரசுகள் அதிலும் பிரித்தானிய காலனித்துவம் என்கிறார். பிரித்தானிய அரசின் கொள்ளைதான் காலனிய நாடுகளில் பெரும் ஏற்றதாழ்வுகளை ஏற்படுத்தியது.அதன் மூலம் பிரித்தானிய தொழில்மயமாக்கலில் பெரும் வளர்ச்சியடைந்தது.அதற்கு சில எடுத்துக்காட்டுகளையும் சுட்டிக் காட்டுகிறார் கோஷ்.ஆனால் அதில் ஒரு பயனும் இருக்கிறது என்கிறார்.அதாவது பிரித்தானியாவில் இருந்து விடுபட்ட ஆசிய மற்றும் ஆப்பிரிக்க காலனிய  நாடுகள் தொழில்மயமாக்கலுக்குள் கிட்டத்தட்ட நூறாண்டுகளுக்குப் பிறகுதான் வந்தது. அதனால் சுற்றுப்புற சீரழிவு தாமதமாகத்தான் வந்தது என்கிறார்.சட்டென்று மனதுக்கு சரியென்று படுகிறது ஆனால் ஆனால் மக்கள்தொகை மற்றும் ஏற்றத்தாழ்வு நூறாண்டுகளுக்கு முன் இப்போது போல அல்ல. ஏனோ அதை பற்றி கோஷ் ஏதும் சொல்லவில்லை.ஆசியாவின் பங்களிப்புதான் பூமி வெப்பமடைதலில் மிக முக்கியம் ஏனென்றால் அங்குதான் அதிக மக்கள் பாதிக்கப்படும் சாத்தியம் அதிகம் என்கிறார். அது உண்மைதான் நான் வாசித்த பல்வேறு அறிக்கைகளில் அதுவே கூறப்பட்டுள்ளது . Politics பகுதியில் பெயரைப் போலவே பூமி வெப்பமடைதல் பற்றிய அரசியலைப் பேசுகிறார் கோஷ்.பூமி வெப்பமடைதல் பற்றி நம்மளிடையே ஒருமித்த கருத்து இல்லாதது  எந்த முடிவு  எடுப்பதற்கும் ஒரு பெரிய தடையாக இருக்கிறது என்கிறார். பாரிஸ் ஒப்பந்தத்திற்கும் போப் பிரான்சிஸின் "Laudato Si"  கடிதத்திற்கு உள்ள பெரும் வித்தியாசத்தை எடுத்துக்காட்டி இப்படி மத நிறுவனங்கள் தான் மக்களை பெரிதாகவும் விரைவாகவும் இணைக்க முடியும் என்கிறார்.போப் பிரான்சிஸின் "Laudato Si"  கண்டிப்பாக வாசிக்க வேண்டிய ஆவணம். போப் அனைத்தையும் வெளிப்படையாகவும் தெளிவாகவும் எல்லோருக்கும் புரியும் மாதிரி எழுதியுள்ளார் ஆனால் பாரிஸ் ஒப்பந்தமோ ஏதோ corporate ஒப்பந்தம் மாதிரி எவருக்கும் புரியாத அளவுக்கு உள்ளது.பூமி வெப்பமடைதல் பற்றி ஒரு புதிய கோணத்தைக் வாசகருக்கு அளிக்கிறது. அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம். https://unfccc.int/sites/default/files/english_paris_agreement.pdf http://w2.vatican.va/content/francesco/en/encyclicals/documents/papa-francesco_20150524_enciclica-laudato-si.html

@ChemRaj

The Costliest Pearl - Bertil Lintner சீனா எப்படி இந்தியப்  பெருங்கடலைச் சுற்றி பாதுகாப்பு மையங்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறது என்பதைப் பற்றிய புத்தகம்.அதிபர் சீயின் கனவான "Belt and Road Initiative" திட்டத்தின்படி சீனா மிக விரைவாக அனைத்து துறையிலும் குறிப்பாக வெளிவுறவில் முன்னேரி வருகிறது. கிட்டத்தட்ட தெற்கு சீன கடல் முழுவதையும் சீனா தன்னுடையதாகிக் கொண்டது. அடுத்து இந்திய பெருங்கடல். காலங்காலமாக இந்தியாவிற்கு இந்திய பெருங்கடல் தனக்குத்தான் என்பதில்  எந்த ஒரு மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் சமீப காலமாக சீனா இந்தியப் பெருங்கடலில் உள்ள  சிறு தீவு நாடுகளை தனது பண மற்றும் கட்டுமான உதவிகள் மூலம்தன் பக்கம் ஈர்த்துக் கொண்டிருக்கிறது.சீனா எந்தொரு நாட்டிற்கும் எதையும் இலவசமாக செய்யாது. ஏர்போர்ட் ,பள்ளிகள் , மருத்துவமனைகள் சாலைகள் இப்படி பல பணிகள் செய்வதற்கு கடன் மட்டும் கொடுக்காமல் அவைகளை செய்வதற்கு சீனர்களை மட்டும்தான் பயன்படுத்துகிறது.மற்றொரு முக்கியமான விசயம் சீனா தான் காட்ட உதவும்  ஏர்போர்ட் மற்றும் துறைமுகங்களின் நிருவாகத்தை 80% சதவீதத்தை தன் கையில் வைத்துக் கொள்கிறது. இந்திய பெருங்கடலில் உள்ள பெரும்பான்மையான சிறிய நாடுகள் வறுமையில் உள்ளன அதிலும் நிலையான அரசில்லாமலும் இருக்கிறது. இந்த சூழ்நிலையை சீனா தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறது. சீனா "Debt-trap diplomacy" மூலம் பல நாடுகளை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து கொண்டிருக்கிறது. அதற்கு நல்ல உதாரணம் இலங்கையில் உள்ள ஹம்பன்தோட்டா (Hambantota) துறைமுகம். இலங்கை கடனைத் திருப்பிக் கொடுக்காதலால் தற்போது சீனா அந்த துறைமுகத்தை 99 ஆண்டு குத்தகைக்கு எடுத்துக்கொண்டது. இது போல பல ஆப்ரிக்க நாடுகள் சீனாவின் பிடியில் சிக்கியுள்ளது. பெர்டில் இந்திய பெருங்கடலில் உள்ள ஒவ்வொரு நாடுகளையும்  அதன்  இந்திய சீன உறவுவின் அடிப்படையில் விளக்குகிறார்.வெகுகாலமாக இந்தியாவின் பக்கம் இருந்த மியான்மார் மெதுவாக சீனாவின் பக்கம் எப்படி சென்று கொண்டிருக்கிறது என்பதை வாசிக்கும்போது ராஜதந்திரம் என்றால் இப்படித்தான் இருக்கும்போல என்று யோசிக்க வைக்கிறது. இந்தியா மியன்மாரின் ஒரு இனக் குழுவிற்கு ஆயுதம் வழங்கியது என்பது எனக்கு ஆச்சிரியமாக இருந்தது. மாலத்தீவிலும் சீனா இந்தியாவின் ஆதிக்கத்தை உரசி  பார்க்க ஆரம்பித்துவிட்டது. இந்தியா சீனாவின் "Belt and Road Initiative" திட்டத்தை எதிர்க்கிறது ஆனால் குஜராத்தில் சீனா தொழிற் பூங்காவை தொடங்கவிருக்கிறது!  இதற்கு எப்படி அரசு அனுமதி அளித்தது என்பது புரியாத புதிர். மொரீசியஸ் மற்றும் ஸ்கைசெல்ஸ் இன்னும் இந்தியாவின் நம்பிக்கைக்குரிய நாடுகள்தான் ஆனால் அது எவ்வளவு காலத்திற்கு என்று இப்போது கேள்விகள் எழத் தொடங்கிவிட்டன.  இந்திய பெருங்கடலில் இந்தியாவிற்கு பெரிய  ராணுவ முகாம் இல்லை. இந்த இரண்டு நாடுகளில் ஒன்றில் இந்தியா ராணுவ முகாம் தொடங்க பெரும் முயற்சி செய்யப்பட்டு வருகிறது. ஆனால் சீனாவோ டிஜிபோட்டியில் (Djibouti) அமெரிக்க இராணுவ முகாமிற்கு அருகிலேயே தனது நவீன இராணுவ முகமை 2017-ல் தொடங்கியுள்ளது. சீனாவின் இந்திய பெருங்கடல் நடவடிக்கைகளை எதிர் கொள்வதற்கு இந்திய "சாகர் மாலா " என்ற திட்டத்தைத் தீட்டி இந்திய கடல் எல்லைகளை பலப்படுத்த ஆரம்பித்திருக்கிறது. ஆனால் இந்த திட்டத்தில் என்ன பிரச்சன்னை என்றால் இந்த திட்டத்தால் வரும் இழப்புகளை மக்களிடம் சொல்லாமலிருப்பதுதான். பல லட்ச மக்கள் வாழ்வாதாரம் கடலை நம்பியுள்ளது ஆனால் இந்திய அரசோ அவர்களிடம் எதையும் கேட்டதாக தெரியவில்லை. பாதிக்கப்படும் மக்களிடம் கேட்காமல் முடிவு செய்தல் என்ன மாதிரி விளைவு வரும் என்பதற்கு பல நாடுகளில் நடக்கும் சீன எதிர்ப்பே நல்ல உதாரணம். பெர்டில் இந்த பட்டு பாதை (silk route) என்ற சொல்லே சமீபத்தில் தான் உபோயகத்தில் வந்தது என்கிறார். "Belt and Road Initiative" திட்டத்தை பிரபலப் படுத்துவதற்கும் அந்த திட்டம் சரிதான் என்பதற்கும் சீனா இந்த தவறான பிரச்சாரத்தை மேற்கொள்கிறது என்கிறார்.Silk Route என்ற வார்த்தை ஐரோப்பியர்களால் தான் பிரபலப் படுத்தப்பட்டது என்கிறார்.அது "seidenstrassen" என்ற  ஜெர்மன் வார்த்தையின் மொழிபெரியர்ப்பு என்கிறார். இது எல்லாவற்றிற்கும் மேலாக இப்போது சீனா சொல்லும் "Maritime Silk Route " என்பதற்கு வரலாற்று பூர்வமான எந்த ஆதாரமும் இல்லை. சீனாவின் ஒரே பழங்காலப் கடல் பயணம் ஷெங் ஹி (Zheng He) என்பவரால் மேற்கொள்ளப்பட்டது தான் என்கிறார். அவரும் இப்போது சீனா கூறும் அனைத்து பகுதிகளுக்கும் சென்றவர் அல்ல.சீயின் கனவு நிறைவேறுமா? இந்தியா இந்திய பெருங்கடலை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்குமா? காலம் தான் பதில் சொல்ல வேண்டும். அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம்.

@ChemRaj

Password V.Jeeva kumaran Novels வசித்து முடித்த இரவு தூக்கமில்லாமல்  என் மனதில் பலவகையான சிந்தனைகள். ஏனோ தெரியவில்லை இன்னும் தமிழ் மற்றும் சுபா  அவர்கள் இருவரின் குழந்தைகளைப் பற்றிய பயமும் கவலையும் மனதில் ஓடிக் கொண்டே இருக்கிறது. பெரும் கனவு சிதைந்து மீண்டும் அகதிகளாக வீடு திரும்பும் காட்சி என்னை விட்டு அகலாமல் நினைவில் இருந்து கொண்டே இருக்கிறது . வீட்டை எதிர்த்து காதல் திருமணம் செய்துகொண்டு இலங்கையை விட்டு டென்மார்க் செல்லும் தமிழ் மற்றும் சுபாவின் கதை இது. பாஸ்ப்போர்ட்டை கிழித்தெறிந்து விட்டு ஜெர்மனியில் வந்து இறக்கும் அவர்கள் முதலில் ஒரு அகதிகள் முகாமில் தங்கவைக்க படுகிறார்கள் அங்கிருந்து தப்பித்து பன்றி ஏற்றிச் செல்லும் வண்டியில் டென்மார்க்கை அடைகிறார்கள் அங்கும் அவர்கள் ஒரு அகதிகள் முகாமில் தங்கவைக்க படுகிறார்கள். அங்குதான் அவர்களின் இடம்பெயர்ந்த வாழ்க்கை தொடங்குகிறது. தங்களின் படிப்பை முடிக்கிறார்கள்.குழந்தைகள் பிறக்கிறது. இரண்டு மகள்கள் ஒரு மகன். பெற்றோர்களும் அனைத்தையும் மறந்து தங்களின் பேரன் பேத்திகளுக்கு அனைத்தையும் சிறப்பாக செய்கிறார்கள். தங்கள் மறு வாழ்வின் முதல் அடி தங்களின் முதல் மகள் பதின் வயதில் கர்ப்பமானது. அதை அவர்கள் இருவராலும் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அவர்களின் வாழ்க்கையையே மாற்றிவிடுகிறது.தமிழ் தன்மகளை முதன்முதலாக அடிக்கிறான் அதற்கு அவன் இழந்தது பெரிது. மகளை சிறுவர்கள் இல்லத்தில் சேர்கிறது அரசு. சில வருடங்கள் கழித்து இரண்டாவது மகள் தனக்கு விருப்பமானவரை தனது பெற்றோர்கள் திருமணம் செய்ய தடையாக இருக்கிறார்கள் என்று போலீசில் புகார் செய்து அவர்களை விட்டுச் செல்கிறாள். மகன் மட்டுமே படித்து முடிக்கிறான். அவனிடம் தனக்கு விருப்பமான வாழ்க்கையை வாழ் என்று சொல்லிவிட்டு மீண்டும் இலங்கைக்கே செல்கிறார்கள். அங்கு சென்று இறங்கியவுடன் தமிழ் இருவரின் பாஸ்ப்போர்ட்டையும் கிழித்தெறிவதோடு கதை முடிகிறது . புலம்பெயர் வாழ்க்கையின் இன்ப துன்பங்களை நேர்த்தியாக பதிவு செய்துள்ளார் ஜீவகுமாரன். தமிழர்கள் எங்கு சென்றாலும் சாதியையும் கொண்டு செல்கிறார்கள். அதையும் ஆசிரியர் சுட்டிக் காட்டுகிறார். கலாச்சார வித்யாசங்கள் எப்படி இரு தலைமுறைகளை பாதிக்கின்றன என்பதை மிக தெளிவாக எடுத்துக்காட்டுகிறார் ஜீவகுமாரன். வெளிநாடுகளில் இருக்கும் தமிழ் குடும்பங்களுக்கு இது பெரிய பிரச்சன்னை.  பிள்ளைகளை பதின் வயதில் ஊருக்கு அனுப்புவதா வேண்டாமா என்ற கேள்வியுடன் பெற்றோர்கள் பேசுவதை நான் இங்கு சிங்கப்பூரில் பல குடும்பங்களில் பார்த்திருக்கிறேன். மிகவும் கடினமான முடிவுகளில் ஒன்று. வாசிப்பதற்கு தடையில்லா மொழிநடை.பெரிதும் இலங்கை தமிழ் இல்லாதது என்  போன்ற வாசர்களுக்கு வாசிப்பை எளிதாக்கியது. வாசிக்க வேண்டிய புத்தகம் .

@ChemRaj

How to make money Brave Browser Part - 2 Hey guys once again Welcome to our Blog. Today we are going to learn about how to make money using brave browser.If you are new to our blog or seeing this post first time we recommend you to see our first part of this post. Check it Out First Part - How to make money on Brave browser https://read.cash/@ChemRaj/how-to-make-money-using-brave-browser-fbe18c29 Now coming to this what is Brave Browser? Brave browser is free and open source software developed by Brave software.inc.It provides privacy for users and blocks ads and trackers on websites the user visits.Fingerprint protection is blocks the website.The private window is powered by duckduckgo and you can run it on with Tor new tab for more privacy. How to make money on Brave Browser? Step 1 : Visit Brave browsers Official Website to download brave app and install it on your devices and start using it for everyday browsing on internet. Step 2 : Enable brave rewards by clicking triangle icon on the top right corner. Step 3 : Enable Brave Ads to earn free BATs by watching thier own ads to earn more. Step 4 : Participate in Brave Publisher program to earn extra BAT tokens. Step 5 : By referring Brave to other user you get $5 worth BAT token in your account. Step 6 : To withdraw BAT to your wallet you need to link Uphold wallet to brave browser,after linking you can immediately withdraw tokens. That's it.I hope you all love this post.

@ChemRaj

How to make money using Brave Browser Hey Guys,This is Chemraj Welcome to my first post on read.cash.I am really excited about this site.It going to rock the world soon.Now coming to our topic Brave browser is founded by Former Mozilla CEO Brendan Eich. Brave browser is one of the top and growing browser on the market,because of his Reward system allows you to tip to their favourite creator and publisher.Brave browsers one of the main part is Privacy oriented browser.Who wants to surf anonymous on the internet. Brave browser have in built Ad blocker to block ads and trackers,to speed up the site loadup time will reduce after blocking unwanted ads.They have great fingerprint protection against the phishing sites. Brave rewards their your with thats own crypto currency call BAT(Basic Attention Token) which is like bitcoin. We will see how to make money on Brave browser on our second part.Please subscribe for our blog to get notified about every latest news f the crypto world