Vimmalathitha Mamallan Nice Novel
**விமலாதித்த மாமல்லன்** முடிச்சு முடிச்சிலிருந்து விடுபடவேண்டும். முடிந்தால் இந்த முடிச்சை அவிழ்க்க உதவுங்கள். முடிச்சு, ஏன் முதலில் விழுந்தது என்றோ அல்லது ஏன் போட்டுக்கொண்டாய் என்றோ காலாட்டியபடி வக்கணை பேசாதீர்கள். நாளுக்குநாள் முடிச்சு இறுக்கிக் கொண்டிருக்கும் மரணாவஸ்தையின் வலியையும் கொஞ்சம் பரிசீலியுங்கள். ஒரு முனையைப் பிடித்து இழுத்தால் எளிதில் அவிழ்ந்துவிடக்கூடிய சுளுக்குமுடிச்சுகளைப் போடவே பயிற்சியளிக்கப்பட்டிருந்தது. அதைத்தான் பயின்று தேர்ந்ததாய் கர்வித்துப் போட்டுப்பார்க்கப்போனது. போடச் சொல்லிக்கொடுத்தவர் போட்டுக் காண்பிக்கையில் சுலபமாய்த் தெரிந்தது, போடும்போது எப்படி இவ்வளவு சிடுக்காகிக் கழுத்தை நெரிக்கிறது? விடைகளை வைத்துக் கொண்டு கேள்விகளைத் தயாரிக்கும் பயிற்சிக்கூடம்போல் ஆசுவாசமானதல்ல, மிருகவாடைவீசும் பாதையற்ற கானகத்தில் தப்பிக்க வழிதேடி தத்தளித்து அலையும் வாழ்க்கை.
2 comments
semma enjoy with this article you wrote thanks for posting this article.
சுலபமாய்த் தெரிந்தது,போடும்போது எப்படி இவ்வளவு சிடுக்காகிக் கழுத்தை நெரிக்கிறது