read.cash Log in
@ChemRaj

Sakthi Dharunam Jothi Tamil Novel

சக்திஜோதி தருணம் கிளர்ந்தெழும் நினைவுகளின்சுழலில் சுழல்கிறது மனம் நதியில் நீந்தும் மீன்களைப்போல நினைவுகளில் பயணிக்கிறதுஒரு சொல் அருகாமை நறுமணம் உணவுப் பொருட்கள் உடைகளின் வண்ணங்கள் என ஏதாவது ஒன்றிலிருந்து ஊற்றுப்போல நினைவுகள் உருக்கொள்கிறது. குளத்துத் தாமரைக் கொடிகளில் சிக்கி மிதப்பதுபோலவும் சுழித்து ஓடும் நீரில்வந்தடையும் சிறுதுரும்பெனவும் நினைவுகளில் தடுமாறி நிற்கிறது சில தருணங்கள் தாமரை இலைகளில் உருளும் நீர்த்துளிகளென அத்தருணங்கள் மாறிமாறி வெவ்வேறு காலவெளிகளில் ஓடுகிறது முழுதாய் விடுபடத் துடிக்கிறது உன் நினைவு தாமரை இலைமேல்படர்கிறது ஒரு பூவைப் பறித்துக் கொண்டு திரும்புகிறேன் கூடவே நதிக்கரையில் காத்திருந்த தருணத்தையும்.

No comments yet

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.