2
10
கிழியும் படி = சுக்கல் சுக்கலாக கிழியும் படி
அடர் குன்று = அடர்த்தியான குன்று. சூர பத்மனின் நண்பன் பெரிய மலை கொண்டு அதன் வழியாக செல்லும் முனிவர்களையும் மனிதர்களையும் மயக்கி குகைக்குள் செலுத்தி சிறை வைத்து துன்பம் தந்து கொண்டிருந்தான். அந்த மலை கிழியும் படி. மலை என்பது ஒரு உவமை. ஆணவம், கன்மம், மாயையை, காமம், குரோதம், மதம், ஆசை போன்ற மலைகள் நம்மை வழி மாற்றிப் போடுவதை அப்படி குறிப்பிடுகிறார் அருணகிரி.
எறிந்தோன் = உடைத்து எறிந்தோன்
கவி கேட்டு உருகி = சும்மா கேட்டா மட்டும் போதாது, கேட்டு, உணர்ந்து உருக வேண்டும்
இழியும் கவி கற்றிடாது = நல்ல கவி கேட்டால் மட்டும் போதாது, மோசமான கவிதைகளை கற்காமல் இருக்க வேண்டும்.
என்று ஒரு பொருளும் உண்டு. சிலப்பதிகாரத்தில் இதை வைத்து ஒரு அருமையான இடம் உண்டு