இருக்கப் போறதே கொஞ்ச நாள். அதில் படிக்க ஒதுக்கும் நேரம் மிக மிக அற்பமான நேரம். அதிலும் கவிதை படிக்க கிடைக்கும் நேரம் அரிதிலும் அரிது. அந்த சிறிய நேரத்திலாவது நல்ல கவிதை படியுங்கள் என்கிறார் அருணகிரி நாதர்.போகும் வழிக்கு புண்ணியம் தேடுங்கள் என்கிறார் இந்தப் பாடலில்.கந்தர் அலங்காரம் - நல்ல கவிதை படியுங்கள்
கிழியும் படியடற் குன்றெறிந் தோன்கவி கேட்டுருகி
இழியுங் கவிகற் றிடாதிருப் பீரெரி வாய் நரகக்
குழியுந் துயரும் விடாப்படக் கூற்றுவனூர்க் குச்செல்லும்
வழியுந் துயரும் பகரீர் பகரீர் மறந்தவர்க்கே
பதம் பிரிப்போம்.கிழியும் படி அடர் குன்று எறிந்தோன் கவி கேட்டு உருகி
இழியும் கவி கற்றிடாது இருப்பீர் எரி வாய் நரக
குழியும் துயரும் விடாப் படக் கூற்றுவன் ஊருக்குச் செல்லும்
வழியும் துயரும் பகரீர் பகரீர் மறந்தவர்க்கே
இன்றும் திருவுருவம் காண்கிலேன் - என்றும் தான் எவ்வுருவோ நும்பிரான்