அன்றுன் திருவுருவம் காணாதே ஆட்பட்டேன்
இன்றும் திருவுருவம் காண்கிலேன் - என்றும் தான்
எவ்வுருவோ நும்பிரான் என்பார்கட்கு என்னுரைக்கேன்
எவ்வுருவோ நின்னுருவம் ஏது’
ரொம்ப எளிய பாடல்.
அன்று உன் திரு உருவம் காணாதே உனக்கு நான் ஆட் பட்டேன். உன்மேல் காதல் கொண்டேன்.
இன்றும் உன் திரு உருவம் காண்கிலேன். இதற்க்கு இரண்டு அர்த்தம் சொல்லலாம்.
ஒன்று, இன்னும் உன் திரு உருவை காண்கிலேன்.
மற்றொன்று, உன்னை கண்ட பின், நீ வேறு நான் வேறாய் இல்லாமல், ஒன்றெனக் கலந்து விட்டதால், உன் திரு உருவத்தை தனியாகக் காணேன்
என்னிடம், "உன்னுடைய பிரான் என்ன உருவம்" என்று கேட்பவர்களுக்கு நான் என்ன சொல்லுவேன். எது தான் உன் உருவம் என்று இறைவனிடமே கேட்கிறார் அம்மையார்.
பிரியாதவன் என்பதன் மரூவு பிரான். எம்பிரான் என்றால் எம்மை விட்டு எப்போதும் பிரியாதவன் என்று பொருள்
அதில் கடல் தண்ணி வந்து நிறையுமாம். கடல் ஊருக்கு வருகிறது என்றால் எவ்வளவு பெரிய பள்ளம் வேண்டும்.