பஞ்சு போன்ற மென்மை. இளந்தளிரின் வெதுவெதுப்பான அந்த ஈரம். மயில் போல சாயல். தாமரை மலர் போல சிவப்பு. அன்னம் போன்ற தூய்மை. இத்தனையும் இருக்கிறது. ஆனால், நிஜம் இல்லை. வஞ்ச மகள் வந்தாள்.
இந்தப் பாடலை பாருங்கள்...என்ன கற்பனை, என்ன சொல் வளம், அதன் பின்னணியில் இருக்கும் கம்பனின் இராமனைப் பழியில் இருந்து காக்க வேண்டும் என்ற எண்ணம் எல்லாம் புரியும்.
சிலம்புகள் சிலம்பிடை செறித்த கழலோடும்
நிலம் புக மிதித்தனள்; நெளித்த குழி வேலைச்
சலம் புக. அனல் தறுகண் அந்தகனும் அஞ்சிப்
பிலம் புக. நிலக் கிரிகள் பின் தொடர. வந்தாள்.
தாடகை நடந்து வருகிறாள். அவள் காலில் சிலம்பு அணிந்து இருக்கிறாள். அந்த சிலம்பில் பரல்களுக்குப் பதில் மலைகளை பிடுங்கி போட்டு வைத்து இருக்கிறாள். அப்படி என்றால் அது எவ்வளவு பெரிய சிலம்பாய் இருக்கும், அதை அணிந்த கால் எவ்வளவு பெரிதாய் இருக்கும், அந்தக் காலை உடையவள் எவ்வளவு பெரிய உருவமாய் இருப்பாள் என்று கற்பனை செய்து கொள்ளுங்கள்.
அவள் வரும்போது, அனல் கக்கும் கண்ணை உள்ள எமனும், ஏதாவது குகைக்குள் சென்று ஒளிந்து கொள்வானாம்