1
8
புத்திர சோகம் இராவணனை படுத்துகிறது.
எவ்வளவு பெரிய வீரன்.
உலகை எல்லாம் வென்றவன். அவன் அழுகிறான். தரையில்
கிடந்து புரளுகிறான்.
நடக்க கூட முடியாமல் காலை இழுத்துக் கொண்டு
நகர்கிறான்.
அது என்னவோ அவன் நிலத்தை உழுவது போல இருக்கிறது.
அவன் சோகத்தை கம்பன் பிழிந்து தருகிறான்.
படிக்கும் நமக்கு இராவணன் மேல் ஒரு பரிதாபம்
வருகிறது. ஐயோ பாவம் என்று ஒரு பச்சாதாபம் எழுகிறது.
எழும்;
இருக்கும்; இரைக்கும்; இரக்கம் உற்று
அழும்; அரற்றும்;அயர்க்கும்;
வியர்க்கும், போய்
விழும்; விழிக்கும்;முகிழ்க்கும்;
தன் மேனியால்,
உழும் நிலத்தை; உருளும்;
புரளுமால்.
அதில் கடல் தண்ணி வந்து நிறையுமாம். கடல் ஊருக்கு வருகிறது என்றால் எவ்வளவு பெரிய பள்ளம் வேண்டும்.