2
8
கம்ப இராமாயணம் - ஓடி ஒளிந்த எமன்
கரிய பெரிய அரக்கியான தாடகையை கம்பன் வர்ணிக்கும் அழகே தனி.
அவள் ஒரு பெண்.
மாதரையும், தூதரையும் கொல்லுவது பாவம்.
க்ஷத்ரிய தர்மம் அல்ல. இராமன் தாடகை என்ற பெண்ணைக் கொன்றான் என்ற பழிச் சொல் அவன் மேல் வரக்கூடாது எனபதில் கம்பன் மிகக் கவனமாய் கவி புனைகிறான்.
படிப்பவர்களுக்கு தாடகை ஒரு பெண்ணே அல்ல என்ற எண்ணம் வர வேண்டும்.
அப்படி ஒரு எண்ணம் வந்து விட்டால், இராமன் மேல் பழி வராது.
அதை எப்படி செய்வது என்று கம்பன் சிந்திக்கிறான்...
இந்தப் பாடலை பாருங்கள்...என்ன கற்பனை, என்ன சொல் வளம், அதன் பின்னணியில் இருக்கும் கம்பனின் இராமனைப் பழியில் இருந்து காக்க வேண்டும் என்ற எண்ணம் எல்லாம் புரியும்
அப்படி அடிக்கடி எழுந்து உட்கார்ந்ததால் மூச்சு இறைப்பான் அவ்வளவு வலிமை குன்றி விட்டான்