1
8
கிளரொளியிளமை கெடுவதன் முன்னம்,
வளரொளி மாயோன் மருவிய கோயில்,
வளரிளம் பொழில்சூழ் மாலிருஞ்சோலை,
தளர் விலராகிச் சார்வதுசதிரே.
கிளரொளியிளமை = கிளர் ஒளி இளமை
கெடுவதன் முன்னம் = முடியுமுன் (முதுமை வருவதற்கு
முன்னால்)வளரொளி = வளரும் ஒளி, வளர்ந்த ஒளி, வளரும் ஒளி
மாயோன் = கண்ணன், திருமால்
மருவிய கோயில் = உள்ள கோயில் வளரிளம் = வளர் இளம்
பொழில் = பூங்கா
சூழ் = சூழ்ந்த
மாலிருஞ்சோலை = மால் இருக்கும் சோலை தளர்
விலராகிச் = தளர்ச்சி இல்லாமல்
சார்வதுசதிரே = சார்வது சதிரே = சேருவது மேலும் புத்திசாலிதனம்
கந்தர் அலங்காரம் - சுடும் காமம்
காமம் சுடும்.
காமம் தீ. அது ஊனை உருக்கும். உயிரை உருக்கும்.
காமம் மனிதர்களை தடம் புரட்டி போட்டிருக்கிறது. இராஜியங்களின் எல்லை கோடுகளை
மாற்றி எழுதி இருக்கிறது.
கந்தர் அலங்காரத்தில் அருணகிரி நாதர் காமத்தை கடல் என்கிறார். நீந்தி கரை சேர