1
10
சீர் பிரித்த பின்
தந்தையும் தாயும் உற்றாரும் நிற்கத் தனி வழி போயினாள் என்னும் சொல்லு
வந்த பின் பழி காப்பது அரிது, மாயவன் வந்து உரு காட்டுகின்றான்
கொத்தளமாக்கி பரக் கழித்து குறும்பு செயவானோர் மகனைப் பெற்ற
நந்த கோபாலன் கடைத்தலைக்கே நள் இருட்க்கன் என்னை உயித்திடுமின்
பொருள்
தந்தையும் = அப்பாவும்
தாயும் = தாயும்
உற்றாரும் = உறவினர்களும்
நிற்கத் = இருக்க
தனி வழி = அவர்களை எல்லாம் விட்டு விட்டு
தனியாகப் போயினாள் = போனாள்
என்னும் சொல்லு = என்று ஊர் சொல்லும் சொல்
வந்த பின் = வந்து விட்டால்
பழி காப்பது அரிது, = அந்த பழியை காப்து கஷ்டம்
மாயவன் = திருமால்
வந்து உரு காட்டுகின்றான் = வந்து எனக்கு அவன் திரு
மேனியை காட்டுகிறான்
ஓடிப் போய் கல்யாணம் பண்ணிகொண்டால் எல்லாருக்கும் கேட்ட பேருதான