கீழ் கண்ட பாடலில், முதுமையின் கஷ்டத்தை கூறி, அந்த முதிய காலத்தில் நீ வந்து என்னை காக்க வேண்டும் என்கிறார் அருணகிரி பெருமான்....
தொந்திசரிய மயிரே வெளிற நிரை
தந்தமசைய முதுகே வளைய இதழ்
தொங்கவொருகை தடிமேல்வர மகளிர் -- நகையாடி
தொந்தி சரிய மயிரே வெளிற நிரை
தந்தம் அசைய முதுகே வளைய இதழ்
தொங்க ஒரு கை தடி மேல் வர மகளிர் - நகையாடி
வயிறு தொப்பை வைத்து, வெளியே தள்ளிக் கொண்டு வர, முடி நரைத்து வெள்ளை நிறமாக மாற, வெண்மையான தந்தம் போன்ற பற்கள் லொட லொட என்று ஆட (தந்தம் அசைய), முதுகு வளைய, உதடுகள் தொங்கிப் போக, இரு கை வீசி நடந்த நான், இப்போது ஒரு கை கைத்தடியின் பிடித்துகொண்டு நடக்க, இளம் பெண்கள் எல்லாம் சிரித்து....
தொண்டுகிழவ னிவனாரென இருமல்
கிண்கிணெனமு னுரையே குழறவிழி
துஞ்சுகுருடு படவே செவிடுபடு -- செவியாகி
இரு புரவிகளில் ஊர்ந்து வந்தனர். அவர்களுக்குப் பின்னால் செம்புழுதிப் படலம் சிறகென எழுந்திருந்தது.