3
10
பெண்ணின் மனதில் என்ன ஓடுகிறது என்று யார் அறிவார்? அந்த பெண்களே அறிவார்களா என்பது சந்தேகம்.
அசோக வனத்தில், சீதை சிறை இருக்கிறாள். அனுமன் அவளைக் காண்கிறான். "பேசாமல் என் கூட வந்து விடு. உன்னை இங்கிருந்து நான் கொண்டு போய் விடுகிறேன். இராவணனை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்" என்கிறான்.
பேசாமல், அனுமன் கூட போக வேண்டியது தானே.
விமானத்தில், ஒரு பெண் போகிறாள். அந்த விமானம் கடத்தப் படுகிறது. கமாண்டோ படை வீரர்கள் வந்து எல்லோரையும் மீட்கிறார்கள். அப்போது அந்தப் பெண், "அதெல்லாம் முடியாது. உங்களோடு வர மாட்டேன். என் கணவன் வந்து தான் என்னை மீட்க வேண்டும். அப்போது தான் வருவேன் " என்று அடம் பிடித்தால் என்ன செய்வது?
தேசத்திலேயாருஞ் சதமல்ல, நின்தாள் சதங் கச்சியேகம்பனே. 13 சதம் என்றால் நிலையானது, நிரந்தரமானது