2
32
எப்போதும் பூசலை அவர்கள் முன்னெடுத்தனர். அதற்கென்றே அவர்கள் துணிந்து நின்றனர். அந்தத் திரளின் ஒருவகையான உணர்கொம்புகளும் நச்சுக்கொடுக்குகளுமாக அவர்கள் இருந்தனர். பூசல்களை அவர்களே தொடங்கினர், வளர்த்தனர். பிறகு ஒவ்வொருவராக அதில் ஈடுபட அது நுரைத்து மேலெழுந்தபோது அதுவரை அப்பூசல்களுக்கு அப்பால் இருந்த சிலர் எழுந்து வந்து பூசல்களை தணித்தனர்.
எப்போதும் அவர்களால்தான் பூசல் தீர்த்து வைக்கப்பட்டது. அவர்கள் பெரும்பாலும் முதியோர்கள். அனைத்திலும் ஆர்வமிழந்து தங்களுக்குள் சொற்களோடு தனித்திருப்பவர்கள். அவ்விலக்கத்தாலேயே அத்திரள் மேல் ஆணை கொண்டவர்களாக ஆனவர்கள். ஓங்கிய குரலில் “நிறுத்துங்கள்! என்ன இது?
நாம் இதை ஒப்ப இயலாது. இவ்வாறு பெருகும் வெறுப்பு உறுதியாக போராக வெடிக்கும், ஐயம் தேவையில்லை