அல்ல, இவர்கள் சொல்லிச் சொல்லி பகைமையை பெருக்குகிறார்கள். அப்பகைமையையே மேலும் எண்ணி எண்ணி பெருக்கிக்கொள்கிறார்கள். இந்த வெறுமையில் அவர்களுக்கு ஆற்றுவதற்கு தொழிலேதும் இல்லை, ஆக்குவதற்கும் ஏதுமில்லை. எனவே இங்கு எதிர்மறை எண்ணங்களே பெருகுகின்றன. ஒருபோதும் நாம் இதை ஒப்ப இயலாது. இவ்வாறு பெருகும் வெறுப்பு உறுதியாக போராக வெடிக்கும், ஐயம் தேவையில்லை” என்று நான் சொன்னேன். “ஐயம் வேண்டாம், இவர்கள் சொல்லிச் சொல்லி உமிழ்ந்துகொண்டிருக்கிறார்கள். செல்லும் நிலத்தில் இந்த அடையாளங்கள் எவருக்கும் எஞ்சாது. அங்கே இவர்கள் வெறும் கையும்காலும்தான். நாடோடிகளுக்கு ஏது குலம்?” என்றார் சுருதன். “மாறாக பெருக்கில் இறங்கும்போது தெப்பத்தை தழுவிக்கொள்வதுபோல இவர்கள் குலங்களை பற்றிக்கொள்வார்கள். பூசலிடுவார்கள்” என்றேன்.
3
36
அவர்களை தனித்தனியாக பிரித்தால் ஒவ்வொருவரும் உடல் சோர்ந்துவிடுவார்கள். அவர்களால் இப்பணியை செய்ய இயலாது