சாத்யகியும் கிருதவர்மனும் நம்முடன் இருக்கிறார்கள் என்ற செய்திக்குப் பிறகு எவரும் நம்மை எதிர்க்கப் போவதில்லை” என்றார். சுருதன் மேலும் சொல்லத் தொடங்க “உனக்கு அச்சமிருந்தால் நீ வரவேண்டாம். இங்கே பாலையில் கிடப்பதைவிட செல்வது மேல்… என் முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது” என்றார் ஃபானு. சுருதன் தலைவணங்கி “அவ்வாறே” என்றார்.
“மூத்தவரே, ஆணை என்ன? என்ன செய்வது?” என்று ஃபானுமான் கேட்டான். “கிளம்ப வேண்டியதுதான்” என்றார் ஃபானு. “விதர்ப்பத்தின் ருக்மி நம்முடன் வந்து சேர்ந்துகொள்வதாக செய்தி வந்திருக்கிறது” என்றான் ஃபானுமான். “அவரை கிளம்பி பிரபாச க்ஷேத்ரத்திற்கு வரச்சொல். நாம் அங்கு சென்றுகொண்டிருக்கிறோம். இங்கு இனி எவருக்குமாக நாம் காத்திருக்க வேண்டியதில்லை” என்றார் ஃபானு. “அவர் நமக்காக வந்து கொண்டிருந்தார். நகர் சரிந்த செய்தி அறிந்ததும் படைகளை நிறுத்திவிட்டு நம் தூதுக்காக காத்திருந்தார்” என்றார் பிரஃபானு.
இருக்கலாம். நமது மூதாதையர் அங்கிருந்து வந்திருக்கலாம்” என்றார். “இல்லை மூத்தவரே