2
29
நாம் பிரபாச க்ஷேத்ரத்திற்குச் சென்ற பிறகே கூட நம்மை எதிரிகள் தாக்க வாய்ப்பிருக்கிறது. அது கூர்ஜரத்துக்கு மிக அருகே இருக்கிறது” என்றார். ஃபானுமான் சினத்துடன் “கூர்ஜரம் நொறுங்கிக் கிடக்கிறது. நம்மைத் தாக்கும் அளவுக்கு அவர்களுக்கு ஆற்றல் இல்லை” என்றான். “சிந்து தாக்கலாம், சிந்துவை உறுதியான மன்னனொருவன் ஆளத்தொடங்கியிருக்கிறான்” என்றார் சுருதன். “நமக்கு அஸ்தினபுரியின் உதவி இருக்கிறது” என்றார் ஃபானு. “ஆம், ஆனால் அவர்கள் மிக மிகத் தொலைவில் இருக்கிறார்கள்” என்றார் சுருதன்.
ஃபானு அவ்வண்ணம் சுவற்றுடன் அழுத்தப்பட்டதனால் சீற்றம்கொண்டார். “அஞ்சி அஞ்சி வாழ்வதில் பொருளில்லை. நமது படைக்கலங்கள் இன்னும் தாழவில்லை. நம்மிடம் பெருவீரர் இருவர் உள்ளனர்.
அப்பால் தனியாக தங்கியிருந்தனர். அவர்கள் இருவருடைய விற்களையும் நம்பியே