ஃபானு அந்தக் களியாட்டை தனக்கான ஏற்பாக எடுத்துக்கொண்டார். அதில் தானும் கலந்து கண்ணீர்விட்டு நடனமாடினார். அருகணைந்து அனைவரையும் தழுவிக்கொண்டார். இளையோரை முத்தமிட்டார். படைத்தலைவர்களை தோளைப் பிடித்து உலுக்கினார். நெடுநேரம் அந்தக் கொண்டாட்டம் நிகழ்ந்தது. பின்னர் ஃபானு “கிளம்புவோம். அதற்குரிய ஒருக்கங்கள் நடக்கட்டும். வண்டிகள் கட்டப்படட்டும். கூடாரங்கள் சுருட்டப்படட்டும்!” என்றார்.தந்தையே, ஃபானுவின் சொல் அனைவரையும் எழச் செய்தது. குடிகள் அனைவரும் அத்தனை பொழுதும் அத்தகைய ஒரு சொல்லுக்காகத்தான் காத்திருந்தனர். கண்ணீருடன் நெஞ்சில் அறைந்து அவர்கள் அழுதனர். எழுந்து நின்று கைவிரித்து கூச்சலிட்டனர். எண்ணி எண்ணி களிவெறிகொண்டு குதித்துச் சுழன்று ஆர்ப்பரித்தனர். கொண்டாட்டமும் களியாட்டமும் எங்கும் நிறைந்திருந்தது. அந்தப் பொழுதில் பிறிதொன்றையும் அங்கு சொல்ல இயலாதென்று உணர்ந்தேன்.
1
25
நம்மால் கருவூலத்தை பாதுகாக்க முடியும்?” என்றார். ஃபானு “எவர்?” என்றார்