அப்பூசல்களுக்குப் பின்னால் இருப்பது வெறும் சலிப்புதானோ என்று நான் ஐயுற்றேன். அந்தப் பயணத்தில் முதலில் வெற்றுடலாக தங்களை ஆக்கிகொண்டு, ஒருவரை ஒருவர் இணைத்துக்கொண்டு, ஒற்றைப் பேருரு என ஆகி ஒழுகிச் செல்வதே ஒவ்வொருவரும் சந்தித்த அறைகூவலாக இருந்தது. அவ்வாறு அவர்கள் இயல்பாக மாறினார்கள். எறும்புகள் உடலால் பாலம் கட்டி நீர்ப்பெருக்கை கடப்பதுபோல, உடலை ஏணியாக்கி படிகளாகி ஏறிச்செல்வதுபோல், உடலையே அரண்மனையும் கோட்டையுமாக ஆக்கிக்கொள்வதுபோல் பாலையில் திகழ்ந்தனர். ஆனால் உடல் முற்றாகப் பழகி தன்னியல்பாக அனைத்தையும் செய்யத் தொடங்கியதுமே உள்ளம் பிரிந்து தனக்கான இடத்தை தனி வழியை நாடியது. அது வெறுப்பினூடாகவே தன் இருப்பை அடையாளம் காட்டியது.
3
14
கொன்று குவிக்கப்பட்ட போதெல்லாம் விசாரணை கமிஷன்கள் கேட்பாரற்று போயின. ஹாஷிம்புராவில்