அந்தகர்கள் விருஷ்ணிகளுக்கு மேலாக துவாரகையின் அரசப்பொறுப்புக்கு எப்படி வந்தனர் என்று விருஷ்ணி குலத்தலைவர்கள் அலர் தூற்றினர். “மகளிர் வழி முடிகொள்பவனைப் போல் இழிந்தவன் எவன்?” விருஷ்ணிகளின் தலைவன் அமைத்த மாநகரை அந்தகர்கள் அழித்துவிட்டனர் என்று வசைபாடினர். அந்தகக் குடியின் மைந்தராகிய ஃபானு அரசருக்குரிய நிமிர்வு இல்லாமல் முடிவெடுப்பதற்கு பிந்தியமையாலேயே துவாரகையின் குடிகளில் பெரும்பகுதி உயிரிழக்க நேரிட்டது. அவர்களின் களஞ்சியங்களையும் கருவூலச் செல்வங்களையும் கடல் கொண்டுசென்றது. இன்று இறந்துகிடக்கும் எங்கள் மைந்தர்களை அள்ளி நெஞ்சோடு அணைக்கும் தீயூழ் எங்களுக்கு அமைந்ததற்கு வழி வகுத்தவர் அவர். அச்சொல்லுடன் ஹேகயர்களும் போஜர்களும் இணைந்துகொண்டது அந்தகர்களை கொந்தளிக்கச் செய்தது.
3
19
ஏறிச்செல்வதுபோல், உடலையே அரண்மனையும் கோட்டையுமாக ஆக்கிக்கொள்வதுபோல் பாலையில் திகழ்ந்தனர்