கால்பந்து தெரியாதவர் இந்த உலகில் வெகு சிலரே. இந்த புத்தகம் கால்பந்தாட்டத்திற்கு ஒரு காதல் கடிதம். கால்பந்து மைதானத்தில் முக்கியமானவர்களான கோல்கீப்பர் ,defender ,மிட்பீல்டர் ,forward , பயிற்சியாளர், நடுவர் மற்றும் ரசிகர்கள் ஆகியவர்களைப் பற்றியது இந்தப் புத்தகம் . ஒவ்வொருவருக்கும் ஒரு பகுதி.
கால்பந்து எவ்வாறு உலகம் முழுவதும் பரவியது மற்றும் அது எவ்வாறு மக்களை ஒன்றிணைத்து என்று பல எடுத்துக்காட்டுடன் கூறுகிறார். அதற்கு ஒரு எடுத்துக்காட்டு அல்ஜிரியா. 1958-ல் அல்ஜிரியா ஒரு பிரெஞ்சு காலனி . பிரெஞ்சு கால்பந்து அணியில் பல அல்ஜிரியர்கள் இடம் பெற்றிருந்தனர். ஒரே இரவில் அவர்கள் அனைவரும் அல்ஜிரிய அணிக்கு விளையாட சம்மதித்தது பல போட்டிகளில் விளையாடினர். கால்பந்தே விடுதலைப் போராட்டத்தின் முக்கிய பங்காக மாறியது.
கோல்கீப்பர் ஒரு அணி தோல்வியடைந்த உடன் பெரும்பாலும் குற்றம் சாட்டப்படுவது இவர் தான். வெகு சில நேரமே வெற்றிக்கு இவர் காரணம் என அனைவரும் கொண்டாடுவர்.
ஆகியவர்களைப் பற்றியது இந்தப் புத்தகம் . ஒவ்வொருவருக்கும் ஒரு பகுதி