எலா Aziz Zahara-விற்கு கடிதம் எழுதுகிறாள் . அவரும் பதில் எழுதுகிறார்.அவர்களின் நட்பு வளர்கிறது. ரூமிக்கு எப்படி சாம்சோ அதுபோல எலாவிற்கு Aziz . சாம்ஸ் ஒரு நாடோடி வாழ்க்கை வாழ்பவன். அனைத்தையும் அன்பு செய்பவன். அவன் ஒரு சுஃபி (Sufi). அவனது கதை ஒரு துயரமானது. காதலியை இழந்து குடியில் மூழ்கி அனைத்தையும் இழந்து இறுதியில் சுஃபி லாட்ஜ்ல் சேர்ந்து தெளிந்து மீண்டும் வாழ்க்கையை ஆரம்பிக்கிறார். எல்லையில்லா அன்பின் சக்தியை எலாவிற்கு அவர் வழங்குகிறார். எலா தன் வாழ்வைப் புரிந்து கொள்ள ஆரம்பிக்கிறாள்.
சாம்ஸ் அன்பின் பரிணாமங்களை ரூமிற்கு தனது செயல்கள் மூலம் எடுத்துரைக்கிறார். அவர் ஆண் பெண் பேதமின்றி அனைவரையும் அன்பு செய்கிறார். ரூமியை அவரது குறுகிய வட்டத்துக்குள் இருந்து வெளியே கொண்டுவந்து வெளியுலகத்தை அவருக்கு காண்பிக்கிறார்.ரூமி மெதுவாக அவரின் பேரன்பில் இணைகிறார். அவர்களின் நட்பு தெய்வீகமானது ஆனால் ஊர் மக்களோ ரூமியின் இளைய மகனோ அதைப் புரிந்து கொள்ளவில்லை.
நாவல் முழுவதும் ஒருவிதமான திகில் இருந்து கொண்டே இருக்கிறது. இந்த கதை அப்படியொன்றும் திகில் கதையல்ல ஆனால் முன் பின் கதை சொல்லலும் வெவ்வேறு கதாபாத்திரங்களின் நோக்கில் கதை விரிவதும் இக்கதைக்கு ஒரு திகில் உணர்வை ஏற்படுத்துகிறது. நிகழ்கால கதையை விட ரூமி மற்றும் சாம்ஸின் வரலாற்று நிகழ்வுகள் அழகாக சொல்லப்பட்டுள்ளது. ஆங்காகே சொல்லப்பட்டுள்ள அன்பின் விதிகள் கதைக்கு வலு சேர்க்கின்றன.
ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள்.அவர்கள் ஒரு கட்சிதமான பென்டகன் (Pentagon )போல. அவர்களுக்குள்