இது ஒரு ரகசிய சிறைச்சாலையில் நடக்கும் கதை. 1971-ல் மொராக்கோ அரசருக்கு எதிரான கொலை முயற்சியில் ஈடுப்பட்ட வீரர்களில் 58 பேரை Tazmamart சிறையில் அடைப்பதிலிருந்து கதை தொடங்குகிறது. இந்த சிறை ஒரு கொடூரமான இடம்.பத்தடி நீளம் ஐந்தடி அகலம் மட்டுமே கொண்ட இருட்டு அறையில் அவர்கள் அடைக்கப்பட்டனர். அவர்கள் நேராக எழுந்து நிற்க முடியாது. அது அறையல்ல அது ஒரு கல்லறை -வாழும் கல்லறை.
நம்பிக்கை என்பது பயம் இல்லை என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன் .தற்கொலை என்பது தீர்வாகாது.கடும்சோதனை என்பது சவால் . எதிர்ப்பு என்பது கடமை,வேண்டுகோள் அல்ல.
சலீம் என்ற கைதிதான் இந்த கதையின் கதை சொல்லி. கதை சொல்லியென்றுதான் சொல்ல வேண்டும் ஏனென்றால் அவன் தான் விடுதலை ஆகும் வரை மற்றவர்களுக்கும் தனக்கும் கதை சொல்லிக் கொண்டே இருக்கிறான்.பலவிதமான கதாப்பாத்திரங்கள் பலவிதமான பின்னணிகள் கொண்ட கதை இது. அது கைதிகளின் துயரத்தை மட்டும் சொல்லும் கதை அல்ல. என்னை பொறுத்தவரை தேடல் தான் இக்கதையின் மய்யம். அவன் வெளியில் வாழ்ந்த வாழ்க்கை மற்றும் சிறை வாழ்க்கை இரண்டிலும் மாறி மாறி தன்னை தேடுகிறான். வெளி வாழ்வை மறக்க பெரிதும் சிரமப்படுகிறான்.
நீ இறங்கும் ஆறு -சேரன் கவிதைகள் தொ.பரமசிவம் கட்டுரைகள்இப்பொழுது