செயலியை பற்றிய விவரங்கள்
KineMaster என்று சொல்லக்கூடிய இந்த செயலியை KineMaster Corporation என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த செயலி 2013 டிசம்பர் 26 ஆம் நாள் கூகுள் ப்ளே ஸ்டோரில் KineMaster Corporation நிறுவனம் வெளியிட்டது. இதுவரை இந்த செயலியை 10,00,00,000 க்கும் மேற்பட்ட நபர்கள் பதிவிறக்கம் செய்துள்ளனர். தற்போது இந்த செயலியை நீங்கள் கூகுள் ப்ளே ஸ்டோரில் 75.78 எம்பிக்கு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த செயலிக்கு ப்ளே ஸ்டோரில் இதுவரை 5 க்கு 4.4 ரேட்டிங் பெற்றுள்ளது. இந்த செயலியின் பயன்கள் கீழே பார்க்கலாம்.
COMPARED TO PC SOFTWARES
கணினியில் உங்களது வீடியோக்களை எடிட் செய்வதற்கு Adobe premiere Pro மிகப்பெரிய மென்பொருளாக உள்ளது. அதைப்போன்று மொபைலில் வீடியோக்களை எடிட் செய்வதற்கு முதலிடத்தில் உள்ள செயலி Kinemaster. இதை யாராலும் மறுக்க முடியாது. பிரீமியர் புரோவிலுள்ள அனைத்து அம்சங்களும் இந்த Kinemaster உள்ளது. எனவே மொபைலில் வீடியோக்களை எடிட் செய்வதற்கு இந்த செயலி மிக சிறந்த ஒன்றாக உள்ளது.
HOW TO USE THIS BLACK SCREEN EFFECT
இந்த வீடியோ விளைவைக் கொண்டு உங்கள் வீடியோ அல்லது புகைப்படங்களை மேலும் அழகாக வடிவமைக்க இந்த விளைவு உதவுகிறது. இதை எப்படி பயன்படுத்துவது என்று கூறுகிறேன். உங்களது புகைப்படங்கள் அல்லது வீடியோவில் மேல் இந்த விளைவை வைத்துவிட்டு வீடியோவை தேர்வு செய்த பின்னர் பிலண்டிங் என்ற ஒரு ஆப்ஷன் இருக்கும். அதில் ஸ்கிரீன் என்ற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும் பின்னர் உங்களது வீடியோ அந்த விளைவுடன் சேர்ந்து விடும்.
It was cool seeing article in tamil from kolkata.Kinemaster is best video editor